இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 22
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 21 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 6. பழந்தமிழ் இலக்கியம் மொழி என்பது நேருக்கு நேர் கருத்தினை அறிவிக்கும் கருவியாகப் பயன்பட உருவாக்கப்பட்டது; என்றாலும், எழுத்துகள் உண்டான பின்னர் அது கால இடையிட்டும் நாடு இடையிட்டும் கருத்தினை அறிவிக்கும் கருவியாகவும் பயன்படும் நிலையை அடைந்துள்ளது. உயர்ந்த கருத்துகளைத் தன்னுள் கொண்டிருப்பதே இலக்கியம் எனப்படும். மொழியின் முதிர்ந்த பயன் இலக்கியம் எனலாம். இலக்கியமே மக்கள் வாழ்வினைச் சிறப்பிக்கும்; பண்படுத்தும்; இன்பமாக்கும்; உயர்நிலைக்குக் கொண்டு செல்லும். இலக்கியம் என்பது தூய தமிழ்ச்சொல். குறிக்கோளை இயம்புவது…