இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 33: பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள்
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 32 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 33 8. பழந்தமிழின் எழுத்துச் சான்றுகள் ஒரு மொழியின் பழமையை அம் மொழியின் சொற்களே அறிவிக்கும். தமிழ் மொழியின் பழமையைத் தமிழ்ச்சொற்களே அறிவிக்கின்றன. சொற்கள் இலக்கியங்களிலும் வரலாறுகளிலும் இடம்பெற்று நிலைத்திருக்குமேல் அவை தம் பழமையை அறிவிக்க வல்லன. தமிழ்மொழிச் சொற்கள் பழந்தமிழ் இலக்கியங்களிலும் வெளிநாட்டார் வரலாறுகளிலும் இடம் பெற்றுள்ளன. அங்ஙனம் இடம்பெற்று நிலைத்துள்ள சொற்கள் தமிழின் பழமையை உணர்த்த வல்லனவாய் உள்ளன. அறிஞர் காலுடுவல் அவர்கள் இத் துறையில் ஆராய்ந்து பல தமிழ்ச்சொற்கள் மேலை நாட்டு…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 32
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 31 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 32 சொல் ஒன்று தன்னை உணர்த்தாது தன்னோடு தொடர்புடையதனை உணர்த்தும். இதனை ஆகுபெயர் என்பர். தாமரை போன்ற முகம் என்பதில் தாமரை இலை, கொடி முதலியவற்றை உணர்த்தாது அதன் பூவை உணர்த்தி நிற்கின்றது. இவ்வாறு வரும் ஆகுபெயர் வகைகளை, முதலிற் கூறும் சினையறி கிளவியும் சினையிற் கூறும் முதலறி கிளவியும் பிறந்தவழிக் கூறும் பண்புகொள் பெயரும் இயன்றது மொழிதலும் இருபெயர் ஒட்டும் வினைமுதல் உரைக்கும் கிளவியொடு தொகைஇ …
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 31
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 30 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 31 அவை சொற்கள் சேருங்கால் அவற்றைச் சேர்ப்பதற்குத் துணைபுரிவன, வினைச்சொல்லில் காலத்தைக் காட்டி நிற்பன, வேற்றுமை அறிவிக்கும் உருபுகளாகி வருவன, அசைகளாக நிற்பன, இசை நிறைத்து நிற்பன, தத்தம் குறிப்பால் பொருள் தருவன, ஒப்பில் வழியால் பொருள் செய்குந என எழுவகைப்படும். இவை சொற்களாக உருவாகி நிற்றல் மட்டுமன்றி, சொல்லுக்கு முன்னும் பின்னும் வரும். தம் ஈறு திரிந்தும் வரும்; ஓரிடைச் சொல்லை அடுத்தும் வரும். சொற்றொடர்களில் நின்று பலவகைப் பொருள்களை அறிவிக்கும்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 30
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 29 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 30 தமிழில் தொல்காப்பியர் காலம்வரை இன்ன இடைநிலைகள் இன்ன காலத்தை உணர்த்தும் என்ற வரையறை ஏற்படாமல் இருந்திருக்கலாம். பழந்தமிழில் சொற்களெல்லாம் ஓரசை, ஈரசை உடையனவாகவே இருந்தன. அவற்றுடன் துணை வினை சேர்ந்து காலம் அறிவித்தன. த் இறந்த காலத்தையும், உம் நிகழ் காலத்தையும் எதிர்காலத்தையும், வ், ப் எதிர்காலத்தையும், இன் அல்லது இ இறந்தகாலத்தையும், பகுதி இரட்டித்தலால் இறந்த காலத்தையும் வெளிப்படுத்தியுள்ளமை பழந்தமிழ் இலக்கியங் களாலும் தொல்காப்பியத்தாலும் அறியலாம். நிகழ்காலத்தை அறிவிக்கின்ற கிறு,…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 29
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 28 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 29 சொற்களை ஓரெழுத் தொருமொழி என்றும், ஈரெழுத் தொருமொழி என்றும், தொடர் மொழி என்றும் பகுத்துள்ளார். இப்பகுப்புத் தமிழியல்புக்கு ஒத்ததேயாகும். சொற்களால் திணை, பால், எண், இடம் அறியக்கூடும். ஆகவே, திணை வகையால் சொற்கள் உயர்திணை, அஃறிணை என்று பகுக்கப்பெற்றுள்ளன. இப் பகுப்பும் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே நிகழ்ந்தனவாகும். பால்வகையால் ஆண், பெண், பலர், ஒன்று, பல என ஐவகைப்படும். ஆண், பெண், பலர் என்பன உயர்திணைக்கும், ஒன்று, பல என்பன அஃறிணைக்கும் உரியன….
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 28
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 27 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ – 28 அளவுப் பெயரும், நிறைப் பெயரும், எண்ணுப் பெயரும் தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே தமிழில் இருந்துள்ளன. பனை என்னும் சொல் அளவுப் பெயராகவும், கா என்னும் சொல் நிறைப்பெயராகவும் வழங்கியுள்ளன. யாவர் என்னும் சொல் யார் என்றும், யாது என்னும் சொல் யாவது என்றும் மருவி வருவது தொல்காப்பியர் காலத்துக்கு முன்பே உள்ள வழக்காகும். அழன், புழன் என்ற இரு சொற்கள் தொல்காப்பியர் காலத்தில் வழக்கிலிருந்தன; பின்னர் மறைந்துவிட்டன. பல,…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 27
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 26 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 7. பழந்தமிழ் நிலை தமிழ்மொழியின் தொடக்க காலத்தில் ஐ, ஔ நீங்கிய பத்து உயிர்களும், ற, ன நீங்கிய பதினாறு மெய்களும் இருந்திருக்கக் கூடும் எனக் கருதலாம். ஐ என்பதை அ இ எனவும் அய் எனவும், ஔ என்பதை அ உ எனவும் அவ் எனவும் எழுதியும் ஒலிக்கலாம் என்று தொல்காப்பியர் கூறுகின்றனர். ஆகவே ஐ யும் ஔ வும் கூட்டொலிகளாகின்றன. ற என்பது ல்+த சேருங்கால் உண்டாகக் காண்கின்றோம். புல்+தரை=புற்றரை. ன…