இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ 1

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல்,  ஆசிரியர் முன்னுரை) இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 1 1. மொழியின் சிறப்பு  மக்களினத்தைப் பிற உயிர்களினும் உயர்ந்ததாகச் செய்வனவற்றுள் மொழியே தலைசிறந்ததாகும். மக்களினம் மொழியால் உயருகின்றது. மொழியின்றேல் மக்கள் வாழ்வு மாக்கள் வாழ்வேயாகும். ஆனால், மக்களினம் மொழியின்றி வாழ்ந்த காலமும் உண்டு.   மொழியின் துணையின்றித் தமக்குத் தாமே  செய்து கொள்ளக்கூடிய செயல்கள் பல உள. பிறர் கூட்டுறவுடன் செய்து கொள்ளக்கூடிய செயல்களும்  சில உள. நாம் ஆற்ற வேண்டிய செயலில் சிக்கல் சிறிது இருப்பினும் அதனை நீக்கிக்கொள்ளப் பிறர்…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல்,  ஆசிரியர் முன்னுரை

(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 2/2 தொடர்ச்சி) பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் ஆசிரியர் முன்னுரை   உலகில் வழங்கும் மொழிகட்கெல்லாம் முற்பட்ட தொன்மை யுடையது நம் செந்தமிழ். ஆகவே அதனைப் பழந்தமிழ் என்று அழைத்துள்ளோம். இன்னும் பல அடைமொழிகளும் தமிழுக்கு உள. அடைமொழிகளைச் சேர்த்தே தமிழை அழைப்பது புலவர்களின் பெருவழக்காகும். பைந்தமிழ், நற்றமிழ், ஒண் தமிழ், வண் தமிழ், தண் தமிழ், இன்றமிழ் என்பனவற்றை நோக்குக. அதன் பண்பும் பயனும் கருதியே இவ்வாறு அழைக்கப்பட்டு வருகின்றது.   மொழியே நம் விழி;…

இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ நூல் பதிப்புரை 1/2

பேராசிரியர் முனைவர் சி.இலக்குவனாரின் பழந்தமிழ் நூல் பதிப்புரை 1/2 ஆரா அருந்தமிழ், இசைமலி தமிழ், இன்புறுந் தமிழ், இன்றமிழ், ஈரத்தமிழ், உரையார் தமிழ், உரையுறை தமிழ், ஏரினார் தமிழ், ஏழிசை இன்றமிழ், ஒண்டமிழ், ஒண்தீந் தமிழ், ஒளிர்பூந்தமிழ், கலைமலி தமிழ், கலைவளர் தமிழ், குலமார் தமிழ், குலமுத்தமிழ், குற்றமில் செந்தமிழ், குன்றாத் தமிழ், கொழுந்தமிழ், சங்கத் தமிழ், சங்க முத்தமிழ், சங்கமலி செந்தமிழ், சந்த நிறை தண்டமிழ், சந்தமார் தமிழ், சந்தமார்ந்தழகிய தண்டமிழ், சந்தமாலைத் தமிழ், சந்தமின்றமிழ், சந்துலாந் தமிழ், சீர்மன்னு செந்தமிழ், சீர்மிகுந்த…