இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 8
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 7 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 3.பழந்தமிழ் தொடர்ச்சி 4. அம் மொழியின் எழுத்து ஓவிய ஒலியெழுத்தாகும். ஓவியமாக நின்று உருவப்பொருளையும் ஒலியடையாளமாக நின்று அருவப் பொருளையும் அவ் வெழுத்து அறிவித்தது. 5. எழுத்தடையாளங்கள் அசைகளை அறிவியாது முழுச் சொற்களையே அறிவித்தன. உலக மொழிகள் அனைத்தும் முதலில் ஓவிய எழுத்துகளைக் கொண்டிருந்தன;பின்னர் அவற்றினின்றும் ஒலி எழுத்துகள் தோன்றின. ஆங்கில அ, ஆ என்பன ஓவிய எழுத்துகளிலிருந்து தோன்றியனவே. தமிழ் எழுத்துகளும் அவ்வாறு தோன்றியிருக்க வேண்டும்….
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 7
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 6 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 3.பழந்தமிழ் மொழிகளின் தொன்மையை யறிவதற்கு அவற்றின் எழுத்துச் சான்றுகளும் (கல்வெட்டுகள், செப்பேடுகள்) இலக்கியங்களும் பெரிதும் துணை புரிகின்றன. எகித்து நாட்டில் கி.மு. 6000 ஆண்டிலிருந்தே கல்வெட்டுகள் தோன்றியுள்ளன. கி.மு. 3700 முதல் கி.மு. 200 வரை எழுத்தாவணங்கள் தொடர்ந்து வந்துள்ளன. அசீரிய பாபிலோனியா நாட்டில் இலக்கியப் பொற்காலம் கி. மு. ஏழாம் நூற்றாண்டின் இடைப்பகுதியாகும். பெரிசிய நாட்டில் கி.மு. ஆறாம் நூற்றாண்டிலிருந்து இலக்கியத் தோற்றம் எழுந்துள்ளது. பரதக் கண்டத்தில் ஆரிய…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 6
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 5 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 2 மொழிகளும் மொழிக்குடும்பங்களும் தொடர்ச்சி தமிழ்க் குடும்ப மொழிகளுள் திணை எனும் பாகுபாடு உண்டு. ஏனைய குடும்ப மொழிகளுள் இத் திணைப் பாகுபாடு காண்டல் அரிது. இந்தோஐரோப்பிய மொழிகள் சொற்களின் இயல்புக் கேற்பப் பால் கூறும் முறையைக் கொண்டுள்ளது. பொருள் உயர்திணை ஆண்பாலைச் சார்ந்ததாய் இருக்கலாம். ஆனால் சொல் அஃறிணை ஒன்றன்பாலாய்க் கூறப்படும். இந்தோஐரோப்பிய மொழிகளுள் சிலவற்றுள் எல்லாம் உயர் திணையே; ஆண்பால் அல்லது பெண்பால் என்ற பகுப்புத்தான் உண்டு. …
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 5
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 4 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ 2 மொழிகளும் மொழிக்குடும்பங்களும் தொடர்ச்சி இத்தாலிய மொழி, மலேயா மொழி, வங்காள மொழி, போர்ச்சுகீச மொழி, அராபி மொழி ஆயவை பேசுவோர் தொகை ஐந்து கோடிக்கும் ஏழு கோடிக்கும் இடைப்பட்ட எண்ணிக்கையாகும். இவற்றில் சில உலகின் நிலப்பரப்பில் பெரும் பகுதியைத் தாம் வழங்குமிடமாகக் கொண்டுள்ளன. ஆங்கிலம் ஐந்தில் ஒரு பகுதியையும், உருசியம் ஆறில் ஒரு பகுதியையும் ஆட்சி புரிகின்றன. சப்பான் மொழியும் இத்தாலிய மொழியும் சிறு நிலப்பரப்புள் வழங்குகின்றன. ஆங்கிலமும் பிரெஞ்சும் உலகமெங்கும்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 4 : 2 மொழிகளும் மொழிக்குடும்பங்களும்
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 3 தொடர்ச்சி) 2. மொழிகளும் மொழிக்குடும்பங்களும் உலகில் ஈராயித்து எழுநூற்றுத் தொண்ணூற்றாறு (2796) வேறுபட்ட மொழிகள் உளவாம். இவற்றை எல்லாம் சில குடும்பங்களாகப் பிரித்துள்ளனர். அவை இந்தோ ஐரோப்பியன், செமிதிக்கு, சீனம், மலேயா, பொலீசியன், சிதியன் எனப்படும். சிதியன் குடும்பத்தில் திராவிட மொழிகள் சேர்க்கப்பட்டுள்ளன. ஆயினும் திராவிட மொழிகள் என்று கூறப்படுவனவற்றைத் தமிழ்க் குடும்பம் என்று பெயரிட்டுத் தனிக் குடும்பமாகக் கருதுவதே ஏற்புடையதாகும். இந்தோஐரோப்பிய மொழிக் குடும்பத்தில் எட்டுக் கிளைகள் உள்ளன; இன்றும் உயிருடன் வாழ்கின்றன. 1.செருமன்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 3
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 2 தொடர்ச்சி) 1. மொழியின் சிறப்பு தொடர்ச்சி ஆங்கிலேயர்களின் முன்னோர்களான ஆங்கில சாக்சானியர்கள் உரூனிக்கு (Runic) என்று அழைக்கப்பட்ட ஒரு எழுத்து முறையைக் கொண்டிருந்தனர். இவ்வெழுத்துகளுக்கு மந்திர ஆற்றல் உண்டு என்று கருதித் தம் போர்க் கருவிமீதும் பிற கருவிகள் மீதும் இவ்வெழுத்துகளைப் பொறித்து வந்தனர். சிகாந்தினேவியர்களும் (Scandinavians) இவ்வெழுத்து முறையையே கொண்டிருந்தனர். ஆங்கில சாக்குசானியர்களும் சிகாந்தினேவியர்களும் கிருத்துவ சமயத்தைத் தழுவிய ஞான்று உரூனிக்கு முறையைக் கைவிட்டு உரோமானிய முறையைக் கொண்டனர். தமிழர்கள் எழுத்துமுறையை என்று அமைத்துக் கொண்டனர்…
இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 2
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 1 தொடர்ச்சி) 1. மொழியின் சிறப்பு தொடர்ச்சி “அம்மா” என்று, மக்களுடன் நெருங்கிப் பழகும் விலங்குகளாம் பசுவும் எருமையும் ஆடும் கூப்பிடக் காண்கின்றோம். தமிழில்தான் அம்மா எனும் சொல் முழு உருவுடன் ஒலிக்கப்படுகின்றது. ஆதலின் தமிழே இயற்கையை ஒட்டி எழுந்த உலக முதன்மொழியென்று கூறுதல் சாலும். கடலிடையிட்டும் காடிடையிட்டும் மலையிடையிட்டும் வாழ நேர்ந்த காரணத்தால் ஒரு கூட்டத்தினர்க்கும் இன்னொரு கூட்டத்தினர்க்கும் தொடர்பின்றி அவரவர் போக்கில் கருத்தை அறிவிக்கும் மொழியாம் கருவியை உருவாக்கிக் கொண்டனர் மக்கள். பேச்சுமொழியை…