இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 26
(இலக்குவனாரின் ‘பழந்தமிழ்’ – 26 தொடர்ச்சி) ‘பழந்தமிழ்’ சங்கம் தோன்றித் தமிழ் வளர்த்த வரலாற்றை அறிஞர் வையாபுரிப் பிள்ளையும் ஏற்றுக் கொள்கின்றார். சங்கம் தோன்றிய பின்னர், புதிதாக இயற்றப்படும் நூல்கள் சங்கப் புலவர் முன்னிலையில் அரங்கேற்றப்படுதல் வேண்டும் என்ற ஒரு விதியுமிருந்தது என்பதை யாவரும் அறிவர். சங்கம் தோன்றுவதற்கு முன்னர் புதிய நூல்கள் அரசர் கூட்டும் அவையில் அரங்கேற்றப்பட்டன. தொல்காப்பியம் நிலந்தரு திருவின் நெடியோன் அவையில் அரங்கேற்றப்பட்டதாகக் கூறப் பட்டுள்ளது.1 ஆதலின் தொல்காப்பியம் சங்க காலத்திற்கு முற்பட்டதாகும் என்று தெளியலாம். ஆதலின் தொல்காப்பியர் ++…