எழிற்றமிழ் வேந்தன் இளங்குமரனார் இசையுடன் வாழ்வர் ! – புலவர் பழ. தமிழாளன்
எழிற்றமிழ் வேந்தன் இளங்குமரனார் இசையுடன் வாழ்வர் ! (திருவள்ளுவர் ஆண்டு 2053 கடகம் (ஆடி) 8, 24.07.2022 ஞாயிறு அன்று பாவாணர் இயக்கத் திங்கள் கூட்டத்தில் செந்தமிழ் அந்தணர் இரா.இளங்குமரனார் முதலாம் நினைவேந்தல் நிகழ்வில் பாடப்பெற்ற பா) 1. தொடக்கநிலை ஆசானாய்ப் பணியதனை ஏற்றே தொல்தமிழ மாணவர்க்கே தமிழறிவை ஊட்டி நடமாடும் பல்கலையாய் நாட்டகத்தே தோன்றி நாடுதமிழ்ப் பல்கலையில் பணியுமதும் ஏற்று முடமானோர் முனைப்புறவே முதுகெலும்பும் நிற்க முதுமைவரை பணியாற்று மூதறிஞர்…