நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வெற்றி! – இலக்குவனார் திருவள்ளுவன்
நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் வெற்றி! நாடாளுமன்றத்தில் நரேந்திர(மோடியின்) பாசக அரசிற்கு எதிராகக் கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானம் எண்ணிக்கை அடிப்படையில் தோற்கடிக்கப்பட்டிருக்கலாம். ஆனால் மாநிலத் தன்னாட்சி எழுச்சி அடிப்படையில் வெற்றியே கிட்டியிருக்கிறது. “நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்படும் நம்பிக்கையில்லாத் தீர்மானம் என்பது எண்ணிக்கை அடிப்படையிலான விளையாட்டு அல்ல; மத்திய அரசின் தோல்விகளை மக்களுக்கு வெளிப்படுத்த எங்களுக்கு கிடைத்த ஒரு வாய்ப்பாகும்” என்று முன்னமே பேராயக்கட்சி(காங்கிரசின்) மூத்தத் தலைவர் ஆனந்து (சருமா) தெரிவித்திருக்கிறார். அப்படியானால் தீர்மானம் அடிப்படையில் உரையாற்றிய எதிர்க்கட்சிகள் மத்திய ஆட்சியின் அவலங்களை எடுத்துரைத்த அளவில்…
செயலலிதாவைவிடத் திறனாளரான எடப்பாடியார் ! – இலக்குவனார் திருவள்ளுவன்
செயலலிதாவைவிடத் திறனாளரான எடப்பாடியார் ! சட்டப்பேரவை விதி எண்110இன் கீழ் அறிவிப்புகள் வெளியிடல், தான் செல்லும் இடங்களில் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், சட்ட மன்ற உறுப்பினர்கள். கட்சிப் பொறுப்பாளர்கள், தொண்டர்கள் அணிவகுத்துச் சிறப்பிக்கச் செய்தல், சென்னையிலிருந்தபடியே காணொளிக் காட்சிகள் மூலம் பல திறப்பு விழாக்களை நடத்துதல் போன்றவற்றின் மூலம் தன்னைச் செயலலிதாவிற்கு இணையாகவும் சில நேர்வுகளில் அவரை விட உயர்வாகவும் தன்னைக் காட்டிக் கொள்கிறார் இன்றைய முதல்வர் எடப்பாடி க.பழனிச்சாமி. உண்மையில் இவையெல்லாம் அவருக்குத் தேவையே இல்லை. செயலலிதாவைவிடத் திறம்படவே அவர் செயல்படுகிறார்….
ஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல! – இலக்குவனார் திருவள்ளுவன்
ஆளுநர் கிரண்(பேடி) செயல்பாடுகள் செம்மையானவை அல்ல! மத்தியில் ஆளும் பாசக, பாசக ஆளாத மாநிலங்களை ஆளுநர்கள் மூலம் ஆட்டிப்படைத்து வருகிறது. மக்களாட்சிக்கு எதிரான இப்போக்கால் மாநில நன்மைகள் பாதிப்படைகின்றன. தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் காலடியில் வீழ்ந்து கிடப்பதைப் பெருமையாகக் கருதுவதால் இரு தரப்பிலும் சிக்கல் இல்லை. ஆனால் மாநில உரிமைகள் பறிக்கப்படும் தவறான நடைமுறைகள் அரங்கேற்றப்படுவதால் எதிர்க்கட்சிகளும் மக்களாட்சி ஆர்வலர்களும் எதிர்த்துக் கொண்டு வருகின்றனர். தில்லி ஒன்றியப் பகுதியில் முதல்வர் அரவிந்து கெசுரிவால் தலைமையிலான ஆம் ஆத்மியின் கடும் போராட்டங்களுக்குப் பின்னர் உச்ச நீதி…
மொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே! – நக்கீரனில் இலக்குவனார் திருவள்ளுவன்
மொழித் தாளைக் குறைப்பது இந்தி, சமற்கிருதத் திணிப்பை எளிமையாக்கவே! மொழிப்பாடங்கள் சுமையாக இருப்பதாகக் கூறி அரசு, தாள் 1, தாள் 2 என இருந்த முறையை மாற்றியுள்ளது. இனி மொழிப்பாடங்களில் ஒரு தேர்வுத்தாள் மட்டுமே இருக்கும். மேம்போக்காகப் பார்க்க இது சிறப்பானதாகத் தோன்றலாம். ஆனால், மொழி அறிவு என்பது அறிவு வளர்ச்சிக்கு அடிப்படை. அறிவியல் முதலான பிற மொழிப்பாடங்களைப் படிப்பதற்கும் மொழி அறிவு துணை நிற்கின்றது. அறிவில் சிறக்கத் துணையாய் இருக்கும் தாய்மொழி அறிவு குறைக்கப்படுவது மாணவர்களின் அறிவு வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும்….
மக்கள் நாயகம் கொல்லப்பட்டது! மக்களும் கொல்லப்பட்டனர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
மக்கள் நாயகம் கொல்லப்பட்டது! மக்களும் கொல்லப்பட்டனர்! தொடங்கியது நரேந்திர(மோடி) அரசு! முடித்தது எடப்பாடி பழனிச்சாமி அரசு! வேதாந்த வள வரையறு நிறுவனம் (Vedanta Resources plc,)என்பது உலக அளவில் சுரங்கத் தொழிலிலும் மாழை (உலோக)வணிகத்திலும் ஈடுபட்டு வரும் நிறுவனமாகும். இதன் சார்பு அமைப்பாகத் தமிழ்நாட்டில் தூத்துக்குடி மாவட்டம் மீளவிட்டான் ஊரில் சுடெருலைட்டு தொழிலகம் (Sterlite Industries) என்னும் செம்பு உருட்டாலை அமைக்கப்பட்டது. இந்தியத் தேசியப்பேராயத்தின் நரசிம்ம(ராவு) ஆட்சியில் ஒப்புதல் பெறப்பட்ட இத்தொழிலகத்திற்கு 1993 இல் அடிக்கல் நாட்டப்பட்டது. இங்கே செம்புக்கம்பி,…
பொய்களையே முதலீடு செய்யும் பாசகவின் வெற்றி மாயை! – இலக்குவனார் திருவள்ளுவன்
பொய்களையே முதலீடு செய்யும் பாசகவின் வெற்றி மாயை! பொய்யிலே பிறந்து பொய்யிலே வளர்ந்தவர்களை நாம் பார்த்திருக்கிறோம். அந்த நிலையையும் தாண்டி எப்பொழுதும் பொய்களையே முதலீடுகளாகக் கொண்டு பொய்வணிகம் புரிந்து மக்களை ஏமாற்றிப் பயனைடந்து வரும் கட்சி ஒன்று உண்டென்றால் அது பாசக ஒன்றுதான். அண்மையில் (மே 2018) நடந்துமுடிந்த கருநாடகாவின் சட்டமன்றத் தேர்தலிலும் நாம் இதனைக் கண்கூடாகக் காண முடிகிறது. பாசக பல தோல்விகளைச் சந்தித்தும் மாபெரும் வெற்றியாகப் பொய்ப் பரப்புரை மேற்கொள்கிறது. அதன் ஆதரவுக் கட்சிகளும் நடுநிலையாகத் தெரிவிப்பதுபோல் நடித்து நரேந்திர(மோடி)யின்…
அனலும் புனலும் : இசுலாத்தைப் பின்பற்றுவதாலேயே பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட வேண்டுமா? – குவியாடி
பிற கருவூலம் அனலும் புனலும் : இசுலாத்தைப் பின்பற்றுவதாலேயே பெண்களின் உரிமைகள் மறுக்கப்பட வேண்டுமா? அரசியலமைப்பின்படி, இந்தியா சமயச்சார்பற்ற நாடு. ஆனால், நடைமுறையில் ஆரியச்சார்பு நாடாக ஆள்வோர் நடைமுறைப்படுத்துகின்றனர். இதை மறைப்பதற்காக மறுபுறம் அனைத்துச் சமயச்சார்பு நாடாகவும் காட்டிக் கொள்கின்றனர். இறைப்பற்றும் சமய நம்பிக்கையும் தனிமனித உரிமை. அதனைக் குலைக்கவும் காக்கவும் அரசு தலையிட வேண்டிய தேவையில்லை. ஆனால், சமயப்பொதுச் சட்டங்கள்தான் தேவையேயன்றி சமயத்திற்கு – மதத்திற்கு – ஒரு சட்டம் எனப் பல சட்டங்கள் தேவையில்லை! சீர்திருத்தம் என்பது எல்லாச் சமயத்திலும் நடைபெற…
வைரமுத்துவும் ஆண்டாளும் – குவியாடி ,இ.எ.தமிழ்
அனலும் புனலும் : தண்டிக்கப்பட வேண்டிய குருமூர்த்தியும் கண்டிக்கப்படும் வைரமுத்துவும் தேவதாசி என்பது அக்காலத்தில் தவறில்லைதான். இக்காலத்தில் தவறுதான். ஆனால் வைரமுத்துவின் அன்னையை – வேசி என்று சொல்லும் எச்சு.இராசா மீது எந்தக் கண்டனமும் பாயவில்லை! ஒரு சொல் என்பது எந்த இடத்தில் பயன்படுத்தப்படுகிறது, எந்தக்காலத்தில் பயன்படுத்தப்படுகிறது என்பவற்றைப் பொருத்தே பொருளைத்தரும். யாரால் சொல்லப்படுகிறது என்பதைப் பொருத்தும் பொருள் மாறுபடும். தாசி என்பது வேலைக்காரியைக் குறிக்கும். எனவே, இறைவனுக்கு – இறைவன் கோயிலில் வேலை செய்யும் பெண் தாசி எனப்பட்டாள். தாசன் என்பது…
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்! – தமிழ்நாடன், நக்கீரன்
தமிழைச் சீரழிக்கும் மதவெறியர்கள்! ‘ஆண்டாள் தமிழ் மரபில் மலர்ந்தவர். பக்தி இலக்கியத்தில் உச்சம் தொட்டவர். அவரைப்பற்றிப் பேசும் தகுதி மதவெறியர்களுக்கு இல்லை’என்கிறார்கள் தமிழ்க் கவிஞர்கள். கவிஞர் வைரமுத்துவை மையமாக வைத்துக் கொளுத்தப்பட்டிருக்கும் தீப்பந்தம்… இங்கு மக்களாட்சிதான் நடக்கிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது. வைரமுத்துவுக்கு எதிராக இந்துத்துவா அமைப்புகளின் போராட்டங்கள் ஒரு பக்கம் பதற்றப் பரபரப்பைப் பற்றவைக்க… இன்னொரு பக்கம் வைரமுத்து மீது வழக்குகள் பதிவாகிக்கொண்டேயிருக்கின்றன. இஃது இலக்கியவாதிகள், கவிஞர்கள், தமிழறிஞர்கள், அரசியல் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திவருகிறது. இவ்வளவு பதற்றப் பரபரப்பிற்கும் காரணம்,…
அதிர வைத்த தினகரனின் அதிரடி வெற்றி! – இலக்குவனார் திருவள்ளுவன்
அதிர வைத்த தினகரனின் அதிரடி வெற்றி! இராதாகிருட்டிணன் நகர் சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தினகரன் வெற்றி எதிர்பார்த்த ஒன்றுதான். ஆனால், கனவுகளில் வாழ்ந்தவர்களும் அவர் வெற்றி பெறக்கூடாது எனக் கருதியவர்களும் கட்சியையும் ஆட்சியையும் கைப்பற்ற எண்ணிய முகவர்களும் பெரும் அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர். சின்னமும் கட்சியும் ‘மத்திய ஒத்துழைப்பால்’ கிடைத்தமையால் மக்கள் ஆதரவும் கிடைக்கும் எனத் தப்புக் கணக்கு போட்டமையால் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். ‘’தினகரன் வெற்றி பெற்றால் பாசகவின் பிடி தளரும் என்ற நம்பிக்கையில் உள்ளவர்கள் அவர் வெற்றி பெறுவதை விரும்புகின்றனர்” என முன்னரே…
தினகரன் வெற்றி பெற்றால் தேர்தல் செல்லாது என்பார்களா? – இலக்குவனார் திருவள்ளுவன்
தினகரன் வெற்றி பெற்றால் தேர்தல் செல்லாது என்பார்களா? நாளொருமேனியும் பொழுதொரு வண்ணமும் தினகரனுக்குச் செல்வாக்கு கூடி வருவதாக நாம் முதலில் குறிப்பிட்டதைத்தான் இப்பொழுது பிற ஊடகங்கள் கூறி வருகின்றன. இதனால் இராதாகிருட்டிணன் தொகுதிக்கான சட்ட மன்ற இடைத் தேர்தலில் அவர் முதலிடத்தில் இருப்பதாகப் பல இதழ்களிலும் செய்திகள் வந்துள்ளன. பொதுவாக ‘நக்கீரன்’ இதழ் வாக்கெடுப்பின் மூலமான கணிப்பு மிகச் சரியாகவே இருக்கும். ஆனால், ’நக்கீரன்’ இதழ் வெற்றி வாய்ப்பினைத் தினகரனுக்கு அளிக்கவில்லை. ‘தமிழக அரசியல்’ இதழ் தினகரனே முதலிடத்தில் இருப்பதாகத் தெரிவிக்கிறது. வாக்குப்பதிவை ஒட்டி மறு…
தினகரனுக்கு வெற்றிச்சூழலை உருவாக்கும் தேர்தல் ஆணையம் – இலக்குவனார் திருவள்ளுவன்
தினகரனுக்கு வெற்றிச்சூழலை உருவாக்கும் தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சி மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்பட்டுவருவது அனைவரும் அறிந்த உண்மை. இந்தச் சூழலில் சசிகலா அல்லது தினகரன் பொறுப்பிற்கு வந்தால் வெறுப்பு மேலும் மிகுதியாகும் என்ற சூழலே இருந்தது. ஆனால், இவர்களின் வளர்ச்சி கண்டு அஞ்சிய மத்திய ஆட்சி, இவர்களை வேரறுப்பதாக எண்ணி மக்களிடையே செல்வாக்கை உண்டாக்கி வருகிறது. நெருக்கடிநிலையினால் ஏற்பட்ட இன்னல்களால் மக்கள் இந்திராகாந்திக்கு 1977 இல் தோல்வியைத் தந்தனர். அவர் கட்சியிலிருந்தும் நீக்கப்பட்டார். ஆனால் அவர் 1980 தேர்தலில் வெற்றிபெற்று அரசை அமைத்தார்….
