தோழர் தியாகு எழுதுகிறார் 187 : ப.த.ச.சட்டத்தைத் திரும்பப் பெறு! தே.பு.மு.வைக் கலைத்திடு!

(தோழர் தியாகு எழுதுகிறார் 186 : பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)- தொடர்ச்சி) ப.த.ச.சட்டத்தைத் திரும்பப் பெறு! தே.பு.மு.வைக் கலைத்திடு! 2019இல் பாசக ஒரு திருத்தத்தை அறிமுகப்படுத்தியது. அதன்படி, ஆட்கடத்தல் (human trafficking) பற்றிய குற்றச்சாட்டுகள், வெடிமருந்துப் பொருள் சட்டத்தின் கீழ் வரும் குற்றங்கள் (offences under the Explosives Act), மேலும் சில ஆயுதச் சட்டங்கள் (Arms Act) முதலியன இப்போது இந்தத் திருத்தப்பட்ட தே.பு.மு.(என்.ஐ.ஏ.) சட்டத்தின் ஊடாக ஒன்றிய அரசின் அதிகாரத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. ஒன்றிய அரசின் கீழ் இவை கொண்டு வரப்பட்டால்தான்…

தோழர் தியாகு எழுதுகிறார் 186 : பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)

(தோழர் தியாகு எழுதுகிறார் 185 : ஊபாவின் தொடர் கொடுமைகள்-தொடர்ச்சி) பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.) மாணவர்களின் சுதந்திரமான சிந்தனை வளர்ச்சிக்குத் துணைசெய்யும் நாட்டின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் உள்ள செயற்பாட்டாளர்களுக்கு எதிராக இச்சட்டம் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இப்பல்கலைக்கழகங்களில் சனநாயகத்திற்கான துடிப்பான போராட்டங்களையும் விவாதங்களையும் முன்னெடுக்கக் கூடியவர்கள் வேட்டையாடப்பட்டனர். குறிப்பாக குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடியவர்கள் பொய்வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டனர். சவகர்லால் நேரு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உமர் காலித்து, சர்சீல் இமாம் ஆகிய இருவரும் தில்லியில் நடந்த வன்முறைகளில் சதித் திட்டம் தீட்டியவர்கள் என்று…

தோழர் தியாகு எழுதுகிறார் 185 : ஊபாவின் தொடர் கொடுமைகள்

(தோழர் தியாகு எழுதுகிறார் 184 :பாசிசத்தின் கொலை வாளாய் ஊபா!- தொடர்ச்சி) த.எ.த. (ஊபா)வின் தொடர் கொடுமைகள் வழமைப் போலவே, 2004 ஆம் ஆண்டு ப.த.(பொடா) சட்டத்தைத் திரும்பப் பெற்றவுடன் காங்கிரசு அரசு சட்டஎதிர் செயல்கள் தடுப்புச் சட்டத்தில்(ஊபா) பயங்கரவாத தடுப்புக் கூறுகளைச் சேர்த்தது. சட்டஎதிர் தடுப்புச் செயல்களின் வரைவிலக்கணத்தில் ’பயங்கரவாத செயல்’ , ‘பயங்கரவாத அமைப்பு’ ஆகியவை சேர்க்கப்பட்டன. பிணை கிடைப்பதை மிகவும் கடினமாக்கும் வகையில் சிறைப்பட்டவரின் முதல் நோக்கிலான குற்றமின்மையை நீதிமன்றம் ஒப்புகொண்டால்தான் பிணை தரப்படும் என்ற திருத்தம் செய்யப்பட்டது. 2008ஆம்…

தோழர் தியாகு எழுதுகிறார் 184 :பாசிசத்தின் கொலை வாளாய் ஊபா!

(தோழர் தியாகு எழுதுகிறார் 183 : பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! – தொடர்ச்சி) பாசிசத்தின் கொலை வாளாய் ஊபா! இந்தப் பின்னணியில்தான், இரு வழக்கறிஞர்களும் எந்த வழக்கை நடத்திக் கொண்டிருந்தார்களோ அந்த வழக்கிலேயே அவர்களை சேர்த்து புகழ்மிகு முன்னணி(பாப்புலர் ஃப்ரண்ட்டு) அமைப்பின் உறுப்பினர் என்று இட்டுக்கட்டி கைது செய்திருக்கிறது தே.பு.மு.(என்.ஐ.ஏ.)குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்காக வாதாடுவது அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமையில்லையா? தே.பு.மு.(என்.ஐ.ஏ.) வழக்குகளுக்கு வாதாடுவதே குற்றமா? அப்படி வாதாடும் வழக்கறிஞர்களை அவர்கள் வாதாடும் வழக்குகளிலேயே இணைத்துச் சிறைப்படுத்துவது பாசிச அடக்குமுறையன்றி வேறென்ன? இதைக்…

தோழர் தியாகு எழுதுகிறார் 183 : பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)!

(தோழர் தியாகு எழுதுகிறார் 182 : சந்திரிகாவின் குற்ற ஒப்புதல் -தொடர்ச்சி) பாசிசத்தின் வன்முறை நிறுவனமாய் தே.பு.மு.(என்.ஐ.ஏ.)! இனிய அன்பர்களே! இந்திய வல்லரசின் பாசிசப் போக்கு நாளுக்கு நாள் மென்மேலும் மோசமாக வளர்ந்த வண்ணம் உள்ளது. அடக்குமுறைச் சட்டங்களுக்கெல்லாம் தலைச் சட்டமாக இருக்கும் ‘ஊபா’ (UAPA – Unlawful Activities Prevention Act – சட்ட எதிர் செயல்கள் தடுப்புச் சட்டம்) தமிழ்நாட்டில் சகட்டுமேனிக்கு ஏவப்படுகிறது. இதற்கான காவல் எந்திரமாக தேசியப் புலனாய்வு முகமை (NIA – National Investigation Agency) பயன்படுத்தப்படுகிறது. இந்த…