(தோழர் தியாகு எழுதுகிறார் 223 : கல்வியுரிமை மாநாட்டுத் தீர்மானங்கள் – தொடர்ச்சி) வல்லியத்தின்(பாசிசத்தின்) பாலியல் வன்கொடுமை அரசியல் இனிய அன்பர்களே! மணிப்பூர் மாநிலத்தில் சென்ற மே 4ஆம் நாள் நடந்த கொடுமை இந்திய நாடு முழுவதையும், எல்லைகளுக்கு அப்பாலும் கூட, அதிர்ச்சி கொள்ள வைத்துள்ளது. குக்கி இனப் பெண்கள் இருவரை மைதேயி சமூக ஆண்கள் குழு ஒன்று அம்மணமாக்கி ஊர்வலமாக இழுத்துச் சென்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்த நிகழ்ச்சியின் காணொளி இப்போதுதான் குமுக ஊடகங்கள் வழியாக வெளிவந்துள்ளது.அந்தக் காட்சியைக் காட்ட வேண்டா…