ஈழப் புரட்சிப் பாடகர் சாந்தனுக்கு உதவுங்கள்!
ஈழப் புரட்சிப் பாடகர் சாந்தன் அவர்களுக்கு உடனடியாக உதவுங்கள்! ஈழத்தின் வலிகளையும் மாவீரர் பெருமைகளையும் களமாடிய கண்ணியங்களையும் கரிகாலன் செயற்பாடுகளையும் தேன்குரலில் உலகமெங்கும் கொண்டுசென்ற ஈழத்தின் இசைக்குயில், எமதன்பிற்கினிய சாந்தன் அண்ணா அவர்கள் இன்று தனது இரண்டு சிறுநீரகங்களும் வலுவிழந்த நிலையில் மாற்று அறுவைச் சிகிச்சைக்காக இரத்தத் தூய்மை செய்து கொண்டு, அந்த நாளுக்காகக் காத்திருக்கின்றார். மாற்றுச் சிறுநீரகமும் ஆயத்தமான நிலையில் அதற்கான நிதியுதவி மட்டுமே தாழ்ச்சியாகின்றது. உடனடியாக மாற்றுச்சீரகம் பொருத்த வேண்டும் என்ற மருத்துவர்களின் எச்சரிக்கை இப்போதைய செய்தி. …