கேட்டல் முறை – பவணந்தி முனிவர்
கேட்டல் முறை ஒருமுறை கேட்போன் இருகால் கேட்பின் பெருக நூலில் பிழைபாடு இலனே முக்கால் கேட்பின் முறையறிந்து உரைக்கும். ஆசான் உரைத்தது அமைவரக் கொளினும் கால்கூறு அல்லது பற்றலன் ஆகும். அவ் வினையாளரொடு பயில்வகை ஒரு கால் செவ்விதின் உரைப்ப அவ்இரு காலும் மை அறு புலமை மாண்பு உடைத்தது ஆகும். பவணந்தி முனிவர் : நன்னூல் பாடங்கேட்பவன் ஒரு முறையுடன் நில்லாது இரண்டாம் முறையும் கேட்டானாயின், மிகுதியும் பிழையின்றிக் கற்றவனாவான். மூன்றாம் முறையும் கேட்டனாயின், ஆசிரியர் கற்பித்ததை உணர்ந்து பிறர்க்குச் சொல்லும்திறன்பெற்றவனாவான். …