வேண்டா! வேண்டா! வேண்டா! – இளவல்
நம் மொழியில் பாடினால்தான் கடவுளுக்கும் காது கேட்கும்! – இராசாசி
நம் மொழியில் பாடினால்தான் கடவுளுக்கும் காது கேட்கும்! மனிதன் மொழிகளுடன் சேர்த்து இசையைக் கேட்கும்போது ஒரு தனி மகிழ்ச்சி உண்டாகிறது. மனிதக் குரல் சேர்ந்தவுடன் என்ன சொல்லுகிறார் என்று கூடவே மனம் கேட்கிறது. இசை மனத்தில் ஏறுவதுடன், என்ன சொல்லுகிறார் என்பதும் கூட ஏறுகிறது. இசையில் மொழிகள் வரும்போது அவை பொருளற்றதாய் வேறு ஏதோ ஒலியாய், முரசின் ஒலியாய், தம்பட்டையின் ஒலியாய் இருப்பதற்கு மாற்றாக, இசையின் சுவைக்கு இணைந்ததாக, நமக்கும் விளங்கும் மொழியாக இருந்தால் மகிழ்ச்சியாக இருக்கும். நம் மொழியில் பாடினால்தான் நம்…
பாடலியற்றுவோர் பலநூல்புலமை பெற்றிருக்க வேண்டும்! – சி.இலக்குவனார்
பாடல்கள் இயற்றுவோர் யாப்பிலக்கணம் மட்டும் அறிந்தால் போதாது. நிலநூல், வான்நூல், உயிர்நூல், அற நூல், மெய்யறிவு நூல், உழவு நூல், கடவுள் நூல், மக்களின் நூல் முதலியன யாவும் கற்றறிந்து இருத்தல் வேண்டும். அவர்களே வழுவின்றி யாவரும் விரும்ப எக்காலத்தும் நிலைத்து நிற்குமாறு இலக்கியம் இயற்றுதல் இயலும். கற்பித்துக் கூறும் நாடக வழக்காயினும், கண்ணாற் காணும் உலகியல் வழக்காயினும் முற்றும் கற்றுத் துறை போய புலவர்களே செம்மையுற இயற்றுதல் இயலும். தொல்காப்பியர்க்கு முன்னும் பின்னும் வாழ்ந்த புலவர்களில் பலர் அன்ன மாட்சியினை உடையராய்…
தமிழ்ஒளி – 91 : பாடல் -கவிதை-உரை
புரட்டாசி 7, 2045 / 23.09.2014
நாளும் வளர்வாய் நல்ல படி! – கு.ந.தங்கராசு
அம்மா, அப்பா என்ற படி, அங்கும் இங்கும் நடந்த படி, அழகுத் தமிழில் பாட்டுப் படி, அம்மா சொல்லித் தந்த படி! ஆசை முத்தம் கொடுத்த படி, அப்பா மகிழ்வு கொள்ளும் படி, அன்னைத் தமிழில் பாட்டுப் படி, அப்பா கற்றுக் கொடுத்த படி! அண்ணன் அக்கா சிரிக்கும் படி, அத்தை மாமா மகிழும் படி, மழலைத் தமிழில் பாட்டுப் படி, மனம்போல் குறும்பு செய்த படி! நடைவண்டி பிடித்து நடந்த படி, ஙஞண நமன என்ற படி, நாளும் வளர்வாய் நல்ல படி!…
செந்தமிழ்க் காதலன் சின்னச்சாமி – திருச்செங்கோடு என்.கே.பி.வேல்
1. செந்தமிழுக் குயிரீந்த சின்னச்சாமி! தென்னகத்து வரலாற்றின் சின்னமாம் நீ! வெந் தணலில் நொந்துயிரை இந்திக் காக விட்டவனே! மொழிக்காதல் கற்றவன் நீ! தந்தைதாய் மனைமக்கள் சொந்தம் நீத்தாய்! தண்டமிழின் உயிர்ப்பண்பாம் மானம் காத்தாய்! அந்தோநான் என்னென்பேன் அரிய தியாகம் யாருனைப்போல் தாய்மொழிக்காகச் செய்தா ரிங்கே? 2. தொடுத்தபுகழ்க காஞ்சிமா நகரில் தோன்றித் தொல்லாண்மைத் திராவிடரின் சோர்வைப் போக்கி அடுக்குமொழி மேடைகளில் அழகாய்ப் பேசி அனைவருமே தமிழ் சுவைக்க எளிய தாக்கிக் கொடுத்தபெரும் தமி அறிஞர் அண்ணா இந்தி குறித்தெடுத்த போராட்டக் களத்தில் உன்னைக்…
தமிழ்த்தாய் வாழ ஒளி யளித்தாய்!
– தமிழ்ப் புரவலர் தூய தமிழ்க்காவலர் அண்ணல்தங்கோ அ) நெஞ்சத் துணிவுடையாய்! – தமிழர் நேர்மைத் திறமுடையாய்! – தமிழர் கொஞ்சும் தமிழ்வளம் பெற – தீயிலே குளித்த தமிழ் மறவா! ஆ) ‘‘அஞ்சி அடிமைகளாய் – வாழ்பவர் அன்புமக்க ளாகார்!’’ என்றே நெஞ்சுரம் காட்டி நின்றாய்! – சின்னப்பா! நெருப்பிலே நின்றுவென்றாய்! (நெஞ்சத்) இ) வஞ்சகெஞ்ச வடவர்! – திருந்த வாழ்வை நெருப்பில் இட்டாய்! செஞ்சொல் தமிழ மகனே! – சின்னப்பா! திருக்குறட் கோமகனே! (நெஞ்சத்) உ) பஞ்செனத் தீயில் இட்டாய் !…
அச்சம்
கல்வியாளர் வெற்றிச்செழியன் paventharthamizhpalli@gmail.com அஞ்சி அஞ்சி ஒதுங்கிவிட்டால் உதுவும் நடக்குமா ! அஞ்சி நாமும் முடங்கிவிட்டால் உயிரும் நிலைக்குமா ! அச்சம் உள்ள நிலையினிலே அமைதி கிடைக்குமா ! அஞ்சி வாழும் மக்களிடை மகிழ்ச்சி தோன்றுமா ! அச்சம் பெற்ற மூளையிலே அறிவு மலருமா ! அஞ்சி வாழும் அடிமையரின் கொள்கை பிழைக்குமா ! அச்சம் கொண்ட உறவினிலே உண்மை இருக்குமா ! அச்சம் உள்ள உயிர்களிடை…
தமிழைப் போற்ற வாருங்கள்!
– இளவல் அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! பாடம் படிப்போம் வாருங்கள்! பாரில் உயர்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! கலைகள் பயில்வோம் வாருங்கள்! களிப்பாய் வாழ்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! ஒன்றாய் ஆட வாருங்கள்! நன்றாய்ச் சிறக்க வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம் வாருங்கள்! நாளும் அறிவோம் வாருங்கள்! நலமாய்த் திகழ்வோம் வாருங்கள்! அண்ணா! அக்கா! வாருங்கள்! பள்ளி செல்வோம்…