நிலையில்லாத உலகில் நிலைத்தப் புகழைப் பெற…! மன்னனுக்கு அறிவுறுத்திய புலவர்: இலக்குவனார் திருவள்ளுவன்
(சங்கப் புலவர்கள் பொன்னுரை – 2 : தொடர்ச்சி) சங்கப் புலவர்கள் பொன்னுரை – 3 நிலையில்லாத உலகில் நிலைத்தப் புகழைப் பெற…! மன்னா உலகத்து மன்னுதல் குறித்தோர்தம் புகழ் நிறீஇத் தாம் மாய்ந்தனரே! – புறநானூறு 165– திணை : பாடாண் திணை– துறை : பரிசில் விடை– பாடியவர்: பெருந்தலைச் சாத்தனார்.– பாடப்பட்டோன் : குமணன். 15 அடிகள் கொண்ட புறநானூறு 165 ஆம் பாடலின் முதலிரு அடிகளே இவை. இவ்வுலகம் நிலையில்லாதது. நிலையில்லா உலகில் நிலைபெற வேண்டின் புகழை நிலைநிறுத்த…