கம்பர் பாடலில் தமிழ் நாட்டின் எல்லைகள்
கம்பர் பாடலில் தமிழ் நாட்டின் எல்லைகள் சோழ நாட்டின் எல்லை: கடல்கிழக்குத் தெற்குக் கரைபொரு வெள்ளாறு குடதிசையில் கோட்டைக் கரையாம் – வடதிசையில் ஏணாட்டுப் பண்ணை இருபத்து நாற்காதம் சோணாட்டுக் கெல்லையெனச் சொல். (1) [கிழக்கே கடல், தெற்கே (கரைகளில் மோதுமளவு நீர் நிரம்பியுள்ள) வெள்ளாறு, மேற்கில் கோட்டைக்கரை, வடக்கில் ஏணாட்டின் வயல்கள். இவற்றை எல்லைகளாகக் கொண்டு திகழும் 24 காதப் பரப்பு சோழநாடாகும்.] பாண்டிய நாட்டின் எல்லை: வெள்ளா றதுவடக்கு மேற்குப் பெருவழியாம் தெள்ளார் புனற்கன்னி தெற்காகும் – உள்ளார ஆண்ட…