இயன்றவரை உதவுங்கள்!
இயன்றவரை உதவுங்கள்! இனப்படுகொலைப்போரில் இந்த உடன்பிறந்தாளுக்கு ஓர் ஆண், ஓரு பெண் என இரு குழந்தைகள் . இவருக்குத் தற்போது உதவி தேவை தன்னால் சொந்தமாக ஒரு தொழில் செய்யமுடியும் எனவும், தனக்கு ஆடு வளர்ப்பு செய்ய பணம் தேவை எனவும் பண உதவி செய்ய யாரும் முன் வந்தால் தன் இரு குழந்தைகளையும். தன்னால் நல்ல கல்வி கொடுத்து வளர்த்து எடுக்க முடியும் என்றும் தெரிவித்து உதவி வேண்டுகிறார். உதவும் உள்ளங்கள் உதவுங்கள்! தொடர்பு இலக்கம்:-009477 549 9988 சிறீகாந்த சீவா கிளிநொச்சி…
நாட்டுக்காக இரு பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்க்கு உதவுக!
நாட்டுக்காக இரு பிள்ளைகளைப் பறிகொடுத்த தாய்க்கு உதவுக! பட்டினியால் கதறியழும் தாய்! இனப்படுகொலைப்போரின் கொடூரத்தில் இரு கண் பார்வையினை இழந்து தவிக்கும் மகள். நாட்டுக்காக தன் இரு மக்களைப் பறிகொடுத்துவிட்டுப் பட்டினியின் கொடூரத்தில் வாழ வழியின்றிக் கதறி அழும் தாயின் அவலம். உதவிடும் நல்ல மனம் கொண்டோரே உயிரைக்காப்பாற்ற நேரடியாகத் தொடர்புகளை ஏற்படுத்தி உதவிட முன்வாருங்கள். தொலைபேசி இலக்கம்; 0094776553238 வங்கிக் கணக்கு இலக்கம்: எசு.நாகேசுவரி 016020540202, அட்டன் தேசிய வங்கி (HNB) https://youtu.be/nnp5yFzyRu0
சீவனாவின் கனவை நிறைவேற்றுங்கள்!
சீவனாவின் கனவை நிறைவேற்றுங்கள்! போரின் நெருப்பில் சிரிப்பை இழந்த மழலை! தீருமா அவளின் வேதனை? 2009 ஆம் ஆண்டு 3 ஆம் மாதக் காலப்பகுதியில் தமிழின அழிப்பின் மிக உச்சக்கட்ட நடவடிக்கைகள் புதுமாத்தளன் பகுதிகளில் நடந்து கொண்டிருந்தன. அத்தருணத்தில் பல்லாயிரக்கணக்கான அப்பாவிப் பொதுமக்கள் துடிதுடித்து இறந்து கொண்டிருந்தனர். அதிலும் குறிப்பாகக் குழந்தைகள் மிகக் கொடூரமாக அங்கவீனமாக்கப்பட்டுக் கொல்லப்பட்டனர். முல்லைத்தீவு உடுப்புக்குள ஊரைச் சேர்ந்த இரத்தினராசா சீவனா (அகவை 11) என்னும் சிறுமி, படுகொலை நடவடிக்கையில் சிக்கிப் போர்க்காயங்களுடன் ஊனமாக்கப்பட்டு மீண்டுள்ளார். 2009 ஆம்…