அயலவரின் முதல் தமிழ்க்கையேடு : நிறைவு – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்

(சித்திரை 20, 2046 / மே 03, 2015 தொடர்ச்சி) தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு (ஏன் படிக்க வேண்டும்?)   முன்சொல்    16-ஆம் நூற்றாண்டில் தமிழகத்துக்கு வந்த போர்த்துக்கீசியப் பாதிரி அன்றீக்கு அடிகளார் கிறித்துவ மதத்தைப் பரப்ப வேண்டி, தமிழகத்து முத்துக்குளித்துறைப் புன்னைக்காயலில் உள்ளூர் மக்களாகிய பரவரிடையே வாழ்ந்து அவர்கள் பேசிய தமிழைப் படித்தார். தாம் படித்த தமிழைப் பிற பாதிரிமாருக்குக் கற்பிக்கவேண்டி ஒரு கையேடு தயாரித்தார். அதுவே “மலபார் மொழிக் கருவி (Arte Da Lingua Malabar)” என்ற கையேடு….

அயலவரின் முதல் தமிழ்க்கையேடு 7 தொடர்ச்சி – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்

(சித்திரை 13, 2046 / ஏப்பிரல்26, 2015 தொடர்ச்சி)   தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 7 தொடர்ச்சி (புத்தக வெளியீட்டு முயற்சி-3)   ஒரு புத்தகத்தை உண்மையான ஆர்வத்துடனும் ஆய்வு நோக்கத்துடனும் அணுகுகிறவர்களுக்கு நுழைவாயில் இரண்டு இடங்களில்: பொருளடக்கத்தில் (Table of Contents) + சொற்களைத் தேடும் குறிப்புப் பட்டியலில் (Index). படிக்கிறவர்களுக்குப் புத்தகத்தின் உள்ளடக்கம் பற்றித் தெரியாது, இல்லையா, அவர்களுக்கு உதவி செய்யத்தான் இந்த இரண்டும்.    எங்கள் வரலாற்று மொழியியல் பேராசிரியர் என்றி ஓஎனிகுசுவால்டு (Henry…

அயலவரின் முதல் தமிழ்க்கையேடு 7 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்

(சித்திரை 06, 2046 / ஏப்பிரல் 19, 2015 தொடர்ச்சி) தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 7 (புத்தக வெளியீட்டு முயற்சி-2)  சிக்கல் − 2 பதிப்பகத்தாரின் பக்க அளவுக்குள் நம் புத்தகக் கருத்தை அடக்குவது!  ஒருவருடைய கையேட்டுப் படியை ஓர் அச்சகத்தின் பக்கங்களுக்குள் கொண்டுவருவது எளிதான செயல் இல்லை! இதைச் சரியாகப் புரிந்துகொள்ளாத சிலர் என்னைக் கிண்டல் செய்து குற்றம் சொன்னார்கள்! மக்களின் இந்த மாதிரிக் கிண்டலில் என்ன புதுமை? சில மக்கள் பிறரைக் குற்றம் சொல்லியும் கிண்டலடித்துமே பொழுதைப் போக்குகிறவர்கள் ஆச்சே!  …

அயலவரின் முதல் தமிழ்க்கையேடு 6 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்

(பங்குனி 29, 2046 / ஏப்பிரல் 12, 2015 தொடர்ச்சி)   தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 6 (புத்தக வெளியீட்டு முயற்சி-1)      2009-இலிருந்து புத்தக வெளியீட்டிற்கான என் தனி முயற்சி  மும்முரமாகத் தொடங்கியது. இயேன் அம்மையாருடன் தொடர்புகொள்ளவே முடியவில்லை. அவர் இருந்தும் இல்லாத நிலை. எனவே, பல இடங்களில் விளக்கம் தருவதற்காக அடிக்குறிப்புகளை நானே சேர்க்கவேண்டியிருந்தது. ஒரு வழியாகக் கருத்துக் கோவையை முடித்தேன். பிறகு புத்தக வடிவை உருவாக்கத் தொடங்கினேன்.    சிக்கல் − 1   பாதிரியாரின் 16-ஆம்…

அயலவரின் முதல் தமிழ்க்கையேடு 5 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்

(பங்குனி 22, 2046 ஏப்பிரல் 05, 2015 தொடர்ச்சி) தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 5 (புத்தக முயற்சிச் சிக்கல்)  1982-இலிருந்து புத்தக வேலையைப் பற்றிய பேச்சை எடுத்தாலே இயேன் அம்மையாருக்கு வெறுப்பாக இருந்தது. எல்லாக் குறிப்பேடுகளையும் கட்டித் தூக்கிவைத்துவிட்டார். என் குறிப்புகள் மட்டும் என்னிடம் இருந்தன. அவ்வப்போதைய தொலைபேசித் தொடர்பும் கிறித்துமசு வாழ்த்துகளும் மட்டுமே எங்கள் தொடர்பை வளர்த்தன. 2001-இல் என் அம்மா இறந்தபோது இயேன் அம்மையாரின் சொற்களே எனக்கு ஆதரவு. 1978-1988 ஆண்டுகளில் என் மகனைப் பிரிந்திருந்த…

அயலவரின் முதல் தமிழ்க்கையேடு – 2 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்

(பங்குனி 1, 2046 / மார்ச்சு 15, 2015 தொடர்ச்சி)   தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 2 (பின்னணி) நினைத்துப் பாருங்கள்!    உங்கள் நாட்டில், உள்ளூரில் அரசியல் குழப்பம்; அமைதியில்லை. உங்கள் தொழிலுக்குக் கேடு. உங்கள் குடும்பத்துக்குக் கேடு. அந்த நேரத்தில் கப்பலில்/தோணியில் வந்து இறங்குகிறார்கள் சில அயலவர். உங்களுக்கும் அவர்களுக்கும் இடையே மனித உருவம் என்பதைத் தவிர ஒற்றுமை என்பது மிகவும் குறைவு; உருவத்தில், நிறத்தில்,  பார்க்கும் முறையில், உடல் அசைவில், … பல வேற்றுமை….

அயலவரின் முதல் தமிழ்க்கையேடு – 1 – இலக்கிய அறிஞர் இராசம் அம்மையார்

தமிழைப் படிக்கப் பாதிரிமார் உண்டாக்கின முதல் கையேடு – 1  முதலில் இந்தத் தலைப்பைப் பற்றி …   ஆம் … பிற நாட்டுக் கிறித்துவப் பாதிரிமார், குறிப்பாக 18-ஆம் நூற்றாண்டுக்கு முன்னால் நம் நாட்டுக்கு வந்தவர்கள், தம் சமயத்தைப் பரப்புவதற்காக நம் மொழிகளைப் படித்து அந்த மொழிகளை விளக்க எழுதிய “இலக்கணம்” அனைத்துமே “கையேடு”களே.  20~21-ஆம் நூற்றாண்டுப் பல்கலைக்கழகத்து ஆய்வாளர்களைப்போல மொழி ஆராய்ச்சி செய்வதற்காக அந்த இலக்கணங்களைப் பாதிரிமார் எழுதவில்லை. தங்களை ஒத்த பாதிரிமாருக்கு உதவும் வகையில் தாங்கள் படித்து அறிந்த மொழிகளை விளக்கியிருக்கிறார்கள், அவ்வளவே.  இந்தக் கையேடுகள்/இலக்கணங்கள்…