ஆருயிர் அன்புச்செல்வி ஆண்டுகள் நூறு வாழியவே!
கார்த்திகை 10, 2046 / நவம்பர் 26, 2015 இல் பிறந்தநாள் காணும் ஆருயிர் அன்புச்செல்வி ஆண்டுகள் நூறு வாழியவே! சென்னை மாகாண மாநிலக்கல்லூரியில் பயின்று தமிழ் இளங்கலைப் பட்டத்தில் மாநில அளவில் முதலிடம் பெற்றுத் தங்கப்பதக்கங்கள் பெற்றுப் பின்னர் திருவனந்தபுரம் அரசர் கல்லூரியில் தமிழ்ப்பேராசரியராகப் பணியாற்றிப் பலரைக் கல்வி பயில ஆற்றுப்படுத்தியவர் அறிஞர் முத்துராமலிங்கம்; அப்பொழுதே பல கோடி மதிப்புள்ள 29 வகைச் சொத்துகள் இருப்பினும் அவற்றைப் பிறருக்கு வழங்குவதில் மகிழ்ச்சி கொண்டு உழைப்பிலும் கல்வியிலும் நாட்டம் கொண்டு கல்விப்பணியாற்றியவர். இவர்…