“செறிவூட்டப்பட்ட அரிசியை நிறுத்துக!”-சென்னையில் கருத்தரங்கு

“உடல் நலத்திற்கும் வேளாண்மைக்கும் எதிரான செறிவூட்டப்பட்ட அரிசியை நிறுத்துக!” சென்னையில் மகளிர் ஆயம் விளக்கக் கருத்தரங்கு! “உடல் நலத்திற்கும் வேளாண்மைக்கும் எதிரான செறிவூட்டப்பட்ட அரிசியை நிறுத்துக!” என்ற தலைப்பில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான மகளிர் ஆயம் சார்பில், சென்னையில் நூல் திறனாய்வு – விளக்கக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. சென்னை எம்ஞ்சியார். நகர் அண்ணா முதன்மைச் சாலையிலுள்ள மகா மகாலில், வரும் சனிக்கிழமை புரட்டாசி 27, 2054 /14.10.2023 /  மாலை 4.30 மணிக்கு நடைபெறுகின்ற இந்நிகழ்வுக்கு, மகளிர் ஆயம் தலைவர் தோழர் அருணா தலைமை தாங்குகினார். மகளிர் ஆயம் பொருளாளர் தோழர் ம. கனிமொழி…