இராவண காவியம்: பாயிரம்: தமிழ்த்தாய் 1-5
(இராவணகாவியம் – கதைச்சுருக்கம் தொடர்ச்சி) இராவண காவியம் பாயிரம் தமிழ்த்தாய் 1.உலக மூமையா யுள்ளவக் காலையே பலக லைப்பயன் பாங்குறத் தாங்கியே இலகி யின்றுநா னென்னு மொழிக்கெலாம் தலைமை யாந்தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 2.பின்னர் வந்து பிறந்து செருக்கொடு முன்னர் வந்த மொழிபல வீயவும், இன்னு மன்ன விளமைய தாயுள தன்னி கர்தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 3.கன்ன டந்தெலுங் கந்துளு வம்புயல் மன்னி மேவு மணிமலை யாளமாம் பொன்னின் மேனி திரிந்து பொலிவறு தன்னை நேர் தமிழ்த் தாயினைப் போற்றுவாம். 4.மூவர் மன்னர் முறையொடு…
பாடம் சொல்லும் முறை – நன்னூல்
பாடம் சொல்லும் முறை ஈதல் இயல்பே இயம்பும் காலை காலமும் இடமும் வாலிதின் நோக்கி சிறந்துழி இருந்து தன் தெய்வம் வாழ்த்தி உரைக்கப்படும் பொருள் உள்ளத்து அமைத்து விரையான் வெகுளான் விரும்பி முகமலர்ந்து கொள்வோன் கொள்வகை அறிந்து அவன் உளங் கொளக் கோட்டமில் மனத்தில் நூல் கொடுத்தல் என்ப நன்னூல் பாடம் சொல்லும்பொழுது உரிய காலத்தையும் உரிய இடத்தையும் தூயதாகத் தெரிவுசெய்து சிறந்த இடத்திலமர்க; தான் வழிபடும் கடவுளை வணங்கிப், பாடம் சொல்ல வேண்டிய பொருளை உள்ளத்தில் இருத்துக; விரைந்து சொல்லாமலும் சினந்து…
தமிழுக்குப் பெயர் வைத்தவர் தமிழரே! – கி.வா.சகந்நாதன்
“தமிழின் பெயரை அப்படியே சொல்லாமல் ஏன் மற்றவர்கள் மாற்றிச் சொன்னார்கள்?” என்று கேட்கலாம். மாற்றவேண்டிய அவசியம் வந்துவிட்டது. தமிழிலன்றி மற்ற மொழிகளில் ழகரம் இல்லை. அதனால் மாற்றிக்கொண்டார்கள். பழங்காலத்தில் தமிழுக்குத் திராவிடமென்ற பெயர் இயற்கையாக வழங்கியிருந்தால், அந்தச் சொல்லைப் பழைய தமிழர்கள் எங்கேனும் சொல்லியிருக்கவேண்டும். தொல்காப்பியத்திலோ அதன்பின் வந்த சங்க நூல்களிலோ திராவிடம் என்ற சொல் இல்லை. தமிழ் என்ற சொல்லே வழங்குகிறது. தமிழ் நாட்டார் தாங்கள் வழங்கும் மொழிக்குரிய பெயரைப் பிறரிடமிருந்து கடன்வாங்கினார் என்பது கேலிக் கூத்து. தமிழ் என்ற பெயர் முதல்…