புதியதோர் தமிழுலகம் புவியில் தோன்றும்! – மு.பொன்னவைக்கோ
புதியதோர் தமிழுலகம் புவியில் தோன்றும்! கி.மு.வில் ஆயிரத்து ஐந்நூறாம் ஆண்டதனில் சேமம் நாடியிங்கு நாடோடிக் கூட்டமொன்று மலைமொழிப் பேச்சுடனே நிலைதேடி வந்தார்கள் ஆரியராய் இம்மண்ணில் அடிவைத்த அந்நியர்கள். செந்தமிழ்ச் சீருடைய சிறப்புமிகுப் பைந்தமிழன் இந்தியத் திருமண்ணில் எங்கும் குடியிருந்தான் வந்தாரை வரவேற்கும் வாசமிகு தமிழனவன் தந்தான் தனதுரிமை தடம்தேடி வந்தோர்க்கு. அந்நியனாய் வந்தவனும் ஆளத்தொடங்கி இங்கு அழித்திட்டான் தமிழ்ப்பண்பை அவன்வகுத்த குலப்பிரிவால். ஆரியரும் தமிழருடன் அருகிப் பழகியதால் அன்றாட வாழ்விலவர் ஆதிக்கம் பெருகிற்று. ஆரியரின் ஆட்சிக்கு ஆட்பட்டான் தமிழ்மகனும். ஆரியர்க்கோ தேவையவர் ஆட்சிக்கு…