இராமகிருட்டிணனின் ‘சொற்களின் புதிர்ப்பாதை’ : எளிய கவித்துவமான படைப்பு – பாரதிபாலன் 1/3
‘உயிர்ச்சுழி’யின் இரண்டாம் பதிப்புரை : இப்போதும்… ஈரவாடை….. : பாரதிபாலன்
‘உயிர்ச்சுழி’யின் இரண்டாம் பதிப்புரை : இப்போதும்… ஈரவாடை….. பதினெட்டு வருடங்களுக்குப் பின்பு, ‘உயிர்ச்சுழி’ இரண்டாம் பதிப்பு வெளிவருகிறது. முதல் பதிப்பினைச் சந்தியா பதிப்பகம் வெளியிட்டது. முதல் பதிப்பில் தேவைக்கு ஏற்பச் சில படிகள் மறுஅச்சு செய்து வெளியிடப்பட்டாலும் முறையான இரண்டாம் பதிப்பாக இதைக் கொள்ளலாம்! ஆம்! பதினெட்டு வருடங்கள் என்பது மிகப் பெரிய கால இடைவெளிதான்! இந்தத் தொகுப்பில் உள்ள கதைகளை மீண்டும் வாசிக்கின்ற போது, ஒரு பழைய ஒளிப் படத்தினைக் காண்பது போன்ற பரவசமும், அது உண்டாக்கும் ஏக்கமும் தான்…
படைப்பிற்குப் பொருள் தரும் பாரதிபாலன் கதைகள் – சா.கந்தசாமி
சொல்லப்படும் வாழ்க்கையோடு இணைந்து போகும் மொழி இலக்கியத்தில் ஏற்படுகின்ற மாறுதல்களை பத்துப்பத்து ஆண்டுகளாகப் பிரித்து, பகுத்துச் சொல்வது ஒரு மரபாக இருக்கிறது. அஃது இலக்கியத்தில் ஏற்பட்டு இருக்கிற மாறுதல், புதிய போக்கு, சிந்தனை என்பது சமூகத்தில் ஏற்பட்ட அளவிற்கு இருக்கிறதா என்பதைத் தீர்மானிப்பது வேறு. சில நேரங்களில் இந்தக் கணிப்பு இலக்கியத்தரம் என்பதை விட்டு விட்டு சமூகக் காரணிகளை மட்டும் கணக்கெடுத்துச் சொல்வதாக அமைந்து விடுவதும் உண்டு. மேலும் சமூக மாறுதல், படைப்பு இலக்கியத்திற்குள் அதிகமாக வராமல் இருக்கிறது என்பதைச் சொல்வது மாதிரியும் இருப்பது…
தகவல் தொழில் நுட்பத் துறையிலும் தமிழ் படித்தவர்களுக்கும் வேலை – எழுத்தாளர், பேராசிரியர் பாரதிபாலன்
தகவல் தொழில் நுட்பத் துறையிலும் தமிழ் படித்தவர்களுக்கும் வேலை “தமிழ் படித்தால் இன்றைய சூழலில் வேலை வாய்ப்புக் கிடைக்குமா?” என்பது குறித்து தமிழ்நாடு பொதுநிலைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் மற்றும் தமிழ்ப்புலத் தலைவர், புதுதில்லி சாகித்ய அகாதெமியின் உறுப்பினர், தஞ்சை தமிழ்ப்பல்கலைக் கழகத்தின் ஆட்சிக்குழு, உறுப்பினர், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகத்தின் கல்விப் பேரவை உறுப்பினர், கல்வியாளர், எழுத்தாளர் பாரதிபாலன் அவர்களிடம் மேற்கொண்ட நேர்காணலில் மாணவர்களுக்கான பல புதிய தகவல்கள். தற்போதைய சூழலில் உயர்கல்விக்கான வாய்ப்பு – வசதிகள் எப்படி உள்ளன? உலக அரங்கில் இந்தியா…
அறமும் தரமும் அற்ற ஆய்வுகள் – பாரதிபாலன், தினமணி
அறமும் தரமும் அற்ற ஆய்வுகள் கல்லூரி, பல்கலைக்கழகங்களில் ஆசிரியராகப் பணி வாய்ப்பினைப் பெற வேண்டும் என்றால் பல்கலைக்கழக நிதிநல்கைக் குழுவின் (UGC) விதிமுறைகளின்படி ஒருவர் முதுநிலைப் பட்டப் படிப்பில் 55% மதிப்பெண்களுடன் தேசிய அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வில் (NET அல்லது SLET) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். முனைவர் பட்டம் பெற்றிருந்தால் இத்தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. இருப்பினும் இத்துடன் ஆசிரியர் தேர்வு வாரியம் அல்லது பல்கலைக்கழகங்கள் நுழைவுத் தேர்வு நடத்தினால் அதில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது விதி. நவம்பர் 2018…
சிறார் இலக்கிய(பால சாகிதி) நிகழ்ச்சி, சென்னை
புரட்டாசி 11, 2048 வியாழன் 27.09.2018 மாலை 5.30 மாலை 5.00 தேநீர் சாகித்திய அகாதமி, குணா வளாகம் இரண்டாம் தளம் 443,அண்ணாசாலை, தேனாம்பேட்டை, சென்னை 18 சாகித்திய அகாதமி நடத்தும் சிறார் இலக்கிய(பால சாகிதி) நிகழ்ச்சி தலைமை: பாரதிபாலன் பங்கேற்போர்: (இ)யூமா வாசுகி சி.இராசாராம் கி.மஞ்சுளா
பாலச்சந்தர் – ஒரு சகாப்தம் : நினைவேந்தல்
அடையாறு கலை இலக்கியச் சங்கம் பாலச்சந்தர் – ஒரு காலக்கட்டம்: நினைவேந்தல் தமிழ்மணம் இலக்கிய மனை, கோட்டூர் தோட்டம் (துரைமுருகன் இல்லம் அருகில்), சென்னை மார்கழி 23, 2045 / சனவரி 7. 2015 மாலை 4.30 அன்புடையீர், தாதாசாகேப் விருதாளர் இயக்குநர் பாலச்சந்தர் நினைவேந்தல் மேற்குறிப்பிட்டவாறு நடைபெற உள்ளது. நடிகர் சாருகாசன், இயக்குநர் இலெனின், இயக்குநர் தமிரா (பாலச்சந்தர் நடித்த இரட்டைச்சுழி படத்தை இயக்கியவர்), (அப்படத்தின் உரையாடலாசிரியர்) தமிழ், எழுத்தாளர் முனைவர் பாரதிபாலன், கல்விக்கடல் முனைவர் ஆனந்த மூர்த்தி…
வையவனை வாழ்த்தலாம் வாருங்கள் ! – பாரதிபாலன் அழைப்பு
வையவன் 75 வையவனை வாழ்த்தலாம் வாருங்கள் ! பாரதிபாலன் அழைப்பு எழுத்தாளர் வையவன் அவர்களின் 75 ஆவது அகவை நிறைவு நாள் விழா வரும் மார்கழி 9 / 24திசம்பரில் [புதன் கிழமை ] மாலை 6 மணி அளவில் சென்னை அடையாறு காந்தி நகர் முதலாவது சாலையில் உள்ள காந்தி நகர் மன்றத்தில்(கிளப்பில்) நடைபெற உள்ளது. முதன்மைவாணர்கள் பலரும் நண்பர்களும் பங்குகொள்ளும் அந்த நிகழ்ச்சியில் நூல்கள் வெளியீடு, அடையாறு தமிழ்ச் சங்கம் தொடக்கம், இதயத்துடிப்பு இதழ் வழங்கல், ஆரூத்ரா மாத ஏடு தொடக்கம்…