முல்லைத்தீவு, பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்

முல்லைத்தீவு, பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் புத்தாடைகள் வழங்கல்     இன்று கனடா நாட்டில் வசிக்கும் செயசுந்தர் கலைவாணி இணையரின் 10 ஆவது திருமண ஆண்டை முன்னிட்டு முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 27 சிறார்களுக்கு 30000 உரூபா பெறுமதியான புத்தாடைகளை வழங்கி வைத்துள்ளார்.   பாரதி பெண்கள் சிறுவர் இல்ல நிருவாகத்தினரால் வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்திற்கு விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாகவே இவ் புத்தாடைகள் இன்று அன்பளிப்பாக வழங்கப்பட்டுள்ளன. அவர்களது விண்ணப்பத்தில் தெரிவித்ததாவது தமது இல்லத்தில் 108 பெண் சிறார்கள் உள்ளதாகவும் இவர்கள் யாவரும் போர் வடுக்களை…

பாரதி பெண்கள் சிறுவர் இல்லச் சிறார்களுக்குக் கற்றல் துணைக்கருவிகள்

பாரதி பெண்கள் சிறுவர் இல்லச் சிறார்களுக்கு  உரூ. 20, 000 பெறுமதியான கற்றல் துணைக்கருவிகள்   திருநேல்வேலி சேர்ந்த வில்வராசன் சுதாகரனின் முதலாம் ஆண்டு  நினைவுநாளை முன்னிட்டு அவரது குடும்பத்தினரால் கார்த்திகை 24, 2047 / 09.12.2016  அன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள சிறார்களுக்கு  உரூ. 20,000 பெறுமதியான கற்றல்  துணைக்கருவிகள் அன்பளிப்பாக வழங்கபட்டுள்ளன.   இல்லச் சிறார்களின் கல்வியில் ஆர்வம் கொண்டு கற்றல் துணைக்கருவிகள் அன்பளிப்பாக வழங்கிய வி.சுதாகரனின் குடும்பத்தினருக்கு நன்றிகளைக் கூறிக்கொள்ளும் தருணம் அமரர் சுதாகரனின் …

பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தினருக்குப் புதுத்துணி வழங்கல்

பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 108 சிறார்களுக்குப் புத்தாடைகள் தைப்பதற்காகத் துணிகள் வழங்கல்     புலம்பெயர் உறவான இலண்டன் நாட்டை சேர்ந்த பரஞ்சோதி சிறிக்காந்து தனது பிறந்த நாளை முன்னிட்டு முள்ளியவளையில் உள்ள பாரதி பெண்கள் சிறுவர் இல்லத்தில் உள்ள 108 சிறார்களுக்குப் புத்தாடைகள் தைப்பதற்காகப் துணிகள், காவிக்கண்டு(சொக்லேட்-Kandos) என்பவற்றை வட்டுக்கோட்டை இந்து வாலிபர் சங்கத்தினூடாக  கார்த்திகை 24, 2047 / 09.12.2016 அன்று வழங்கி வைத்துள்ளார். [படங்களை அழுத்தின் பெரிதாகக் காணலாம்.]