இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 8 : தமிழ்நாட்டுக் கோட்டைகள்
(இரா.பி.சேது(ப்பிள்ளை) எழுதிய தமிழர் வீரம் 7 : கடலாண்ட காவலர்-தொடர்ச்சி) தமிழர் வீரம் 8தமிழ்நாட்டுக் கோட்டைகள்அரண்மனை நாட்டைக் காப்பவன் அரசன்; அவனைக் காப்பது அரண்மனை. அரசன் வாழும் இடம் அரண்மனை எனப்படும். அரண் என்பது கோட்டை. எனவே, அரணுடைய மனையே அரண்மனையாகும். தமிழகத்தில் பழமையும் பெருமையும் வாய்ந்தது மதுரை மாநகரம். நினைப்பிற்கு எட்டாத நெடுங்காலமாகப் பாண்டியர் அத்தலைநகரில் அரசு வீற்றிருந்தனர். அங்கு அமைந்திருந்த ஓர் அரண்மனையின் சிறப்பினைச் சிலப்பதிகாரம் எடுத்துரைக்கின்றது.1 மாளிகையைச் சூழ்ந்து நின்றது நெடுமதில். பலவகைப் பொறிகள் அம் மதிலில் அமைக்கப்பட்டிருந்தன. மாற்றாரை…
பாரி மகளிர் 1 – இரா.இராகவையங்கார்
நல்லிசைப் புலமை மெல்லியலார்கள் – இரா.இராகவையங்கார். : 17 (நல்லிசைப் புலமை மெல்லியலார்கள்- இரா.இராகவையங்கார். 16. தொடர்ச்சி) 4. பாரி மகளிர் பாரி என்பான், தமிழ்நாட்டுப் பண்டைக்காலத்தே பெரும் புகழ் பெற்று விளங்கிய வள்ளல்கள் எழுவருள் தலைமை வாய்ந்தவன். வேள் என்னும் பட்டம் பெற்ற உழுவித்துண்போர் வகையினன்; கொடையிற் சிறந்த எவ்வி என்பவனது தொல்குடியிற் பிறந்தோன்; செல்வமிக்க முந்நூறு ஊர்களையுடைய பறம்புநாட்டுக்குத் தலைவன்; இவனது பறம்புநாடு, பறநாடு எனவும் வழங்கப்படும். ‘பாரி, பறநாட்டுப் பெண்டி ரடி’ எனவும், ‘பறநாட்டுப் பெருங்கொற்றனார்’ எனவும் வழங்குவது காண்க….
சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 6: கபிலர்
சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 5 : கபிலர்
நீர்வளத் தேவையை உணர்ந்த சங்க மன்னர்கள் – பேரா.சி.இலக்குவனார்
சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 3.
(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 2. தொடர்ச்சி) சங்கக்காலச் சான்றோர்கள் 3 1. கபிலர் தொடர்ச்சி மாவும் பலாவும், வாழையும் வள்ளியும், ஆரமும் கமுகும், வேங்கையும் விரிமலர் வெட்சியும், தேனும் தினையும் பெருகிக் கிடக்கும் குறிஞ்சி நிலத்தில் இயற்கை அன்னையின் இன்பத் திருவிளையாடல் ஏற்றமுற்று விளங்குவது இயல்பேயன்றோ? அத்தகைய பல்வளமும் மல்கிக் கிடக்கும் பேறு பெற்று விளங்கியது மாவண்பாரியின் புகழ் பரப்பும் கலங்கரை விளக்கமாய்த் திகழ்ந்த பறம்பு மலை. பறம்பின் வளத்தைக் கபிலர் பாடியுள்ள திறத்தினை என்னென்று போற்றுவது! சங்கச் சான்றோர்க்கே உரிய…
சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 2
(சங்கக்காலச் சான்றோர்கள் – ந. சஞ்சீவி 1. தொடர்ச்சி) சங்ககாலச் சான்றோர்கள் 2 1. கபிலர் ஈராயிரம் ஆண்டுகட்குமுன் நம் தாயகமாம் தமிழகம் இயற்கை வளனும் செயற்கைத் திறனும் நிறைந்து, அறிவும் ஆண்மையும் அருளும் பொருளும் நிறைந்த இன்பத் திருநாடாய்க் காட்சியளித்தது. கலை வளமிக்க புலவர் கவித்திறத்தாலும், கொடை வளமிக்க புரவலர் கருணைத் திறத்தாலும், வேலெதிர் வரினும் அஞ்சி இமையாத விழிகள் படைத்த வீரர் நெஞ்சுரத்தாலும், ‘மக்களின் உயிர் நான்,’ என உணரும் உணர்வு சிறிதும் குறையாது குடி தழீஇக் கோலோச்சிய கோவேந்தரின் நெறி…