பாரெங்கும் பாரீர்! பாரெங்கும் பாரீர்! தமிழினம் தனித் தன்மையோடு சேருவதைப் பாரீர்! பாரீர்! பாரீர்! பேதமைகளைத் தூக்கியெறிந்து ஒன்றாவதைப் பாரீர்! வையகம் வென்றிட தோழமையோடு நடைபோடும் தோழமைத் தமிழினம் இங்கே பாரீர்! பாரீர்! வையகத் தலைமை கொண்டு வழிநடத்தும் தமிழ் வேந்தர்களைப் பாரெங்கும் பாரீர்! உயிரினும் மேலான அறத்தை நாளும் வையக மெல்லாம் சீராய்ப் பரப்பும் தரணி புகழ் கொண்ட தமிழன் விண்ணுலகைச் சுட்டுவிரல் நுனியில் ஆட்டிவைக்கும் விண்ணறிவு கொண்ட தமிழனைப் பாரீர்! பாரெங்கும் பாரீர் பாரீர்! எந்நாளும் எல்லார்க்கும் எல்லாம் ஈயும் கொடையுள்ளம்…