அயற்களை(பார்த்தீனிய)ச் செடிகளைக் கட்டுப்படுத்துக! – வைகை அனிசு
அயற்களை(பார்த்தீனிய)ச் செடிகளைக் கட்டுப்படுத்த மாவட்ட நிருவாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும் தேனி மாவட்டத்தில் அயற்களை(பார்த்தீனிய)ச்செடிகளால் மனிதனுக்கும், கால்நடைகளுக்கும் பலவித நோய்கள் ஏற்படுகின்றன. அவற்றைக் கட்டுப்படுத்தவேண்டும் என இப்பகுதிச் சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர். கடந்த 1955 ஆம் ஆண்டு இரண்டாம் அயற்களை(பார்த்தீனிய)ச் செடி இருந்ததாகவும், இதன் விதை போரின்போது பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள், கருவிகள், இயந்திரங்கள் மூலம் மற்ற இடங்களுக்குப் பரவியதாகவும் கூறப்படுகிறது. இக்களைச்செடி பயிர் செய்யும் விளைநிலங்கள், பயிரிடப்படாத நிலங்கள், என எல்லா வகை நிலப்பகுதிகளிலும் தீங்கு விளைவிக்கும் தன்மையை அதிகரிக்கின்றது. இச்செடியின் வேர்,…