ஒன்பது  கோரிக்கைகளை வலியுறுத்தி வருகிற  மாசி 25, மார்ச்சு 9  அன்று  பார்வையற்ற மாணவர்கள்-  பட்டதாரிகள் சங்கத்தின் சார்பில், காலவரையற்ற உண்ணாநோன்பு அறப்போராட்டம்! நண்பர்களுக்கு வணக்கம்! வருகிற திங்கட்கிழமை அதாவது 09/03/2015 அன்று நடைபெறவிருக்கும் காலவரையற்ற உண்ணா நோன்பு அறப் போராட்டத்திற்கு அனைவரையும் அன்போடு அழைக்கிறோம்! ஒன்பது கோரிக்கைகளை வலியுறுத்தி, ஒன்பது உண்ணா நோன்பு  ஈகையர்களால் முன்னெடுக்கப்படும் இந்தப் போராட்டத்திற்கு, உறுப்பினர்களிடமிருந்து  உற்சாக  ஆதரவு  வேண்டுகிறோம். பணி நாடுநர்கள், பணியில் உள்ளவர்கள், மாணவர்கள் என்ற மூன்று தரப்பினர்களையும் மையப்படுத்தியே இந்த ஒன்பது  கோரிக்கைகளும் கட்டமைக்கப்…