ஐ.நாவே நாங்கள் நாதி அற்ற இனமா? எங்களுக்கு நீதி சொல்ல எவரும் இல்லையா? வவுனியாவில் கவனவீர்ப்புப் போராட்டம்  விழலுக்கிறைத்த நீராயிற்றே!   தற்போது ஒரு ‘மறுசுழல் தீர்மானத்தின்’ வாயிலாக, சிறீலங்காவுக்கு மேலும் ஈராண்டுக்கால நீட்டிப்புத்தர முயற்சிகள் செய்யப்படுகின்றன. இந்த ‘மறுசுழல் தீர்மானத்தின்’ முதன்மைக்கூறாகிய, உசாவல்களில் அயல்நாட்டு நீதிபதிகளைச் சேர்த்துக்கொள்வது என்பதை ஏற்கெனவே சிறீலங்காவின் அதிபரும் -தலைமையரும்( பிரதமரும்) பகிரங்கமாக மறுத்துள்ளார்கள். அரசாங்கமே ‘மறுசுழல் தீர்மானத்தின்’ முதன்மைக்கூறினை நிராகரிக்கிறது என்றால், அதே அரசாங்கம் இந்த ‘மறுசுழல்  தீர்மானத்தைச் செயலாக்கும்’ என்று ஐநா மனித உரிமை மன்றம்…