ஊரும் பேரும்: இரா.பி.சேது(ப்பிள்ளை):–11
(ஊரும் பேரும் – இரா.பி.சேது(ப்பிள்ளை) – 10 தொடர்ச்சி) ஊரும் பேரும் – 11 நெய்தல் நிலம் தொடர்ச்சி பாக்கம் கடற்கரைச் சிற்றூர்கள் பாக்கம் என்று பெயர் பெறும். சென்னை மாநகரின் அருகே சில பாக்கங்கள் உண்டு. கோடம் பாக்கம், மீனம் பாக்கம், “வில்லி பாக்கம் முதலிய ஊர்கள் நெய்தல் நிலத்தில் எழுந்த பாக்கம் குடியிருப்பேயாகும். சில காலத்திற்கு முன் தனித் தனிப் பாக்கங்களாய்ச சென்னையின் அண்மையிலிருந்த சிற்றூர்கள் இப்போது அந்நகரின் அங்கங்க ளாய்விட்டன. புதுப் பாக்கம், புரசை பாக்கம், சேப்பாக்கம், நுங்கம் பாக்கம்…