புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் : கவிதைப் போட்டி, கவியரங்கம், விவாத அரங்கம்
புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் நடத்தும் கவிதைப் போட்டி, கவியரங்கம் & விவாத அரங்கம் ஆர்வமுள்ள கவிஞர்கள், பொதுமக்கள் கலந்து கொள்ளலாம் புதுச்சேரிப் படைப்பாளர் இயக்கம் வரும் திசம்பர் திங்களில் தமது 72ஆம் திங்கள் நிகழ்வைச் சமூக விழிப்புணர்வு நிகழ்வாக நடத்த ஏற்பாடு செய்துள்ளது. அவ்வகையில், தற்போது நாட்டில் நிலவுகின்ற பணப்புழக்கம் மற்றும் பணக்குழப்பம் தொடர்பாகக் கவிதைப் போட்டியுடன் கூடிய கவியரங்கம், விவாத அரங்கம் நடத்த உள்ளது. கவிதைப் போட்டித் தலைப்பு: “அலைக்கழிக்கும் 500, 1000 “ மரபுப்பா எனில் 16 அடிகளுக்குள்ளும் புதுக்கவிதை எனில்…
க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் 1/5 – ஆறு.செல்வனின் ஆய்வுரை
1/5 முனைவர் க.தமிழமல்லன் இயற்றிய அண்ணல் பாவியம் :உவமைக் குவியல்! உணர்ச்சிப் படையல்! எதையும் எழுதலாம் என்பவன் எழுத்தாளன். இதைத்தான் எழுதவேண்டும் என்பவன் படைப்பாளன். இதில் ஐயா தமிழமல்லன் அவர்கள் இரண்டாவது வகை. சிந்துகின்ற வியர்வைத் துளியும், செதுக்குகின்ற மைத்துளியும் செந்தமிழர் வாழ்வுக்கே என்னும் சிறப்புக்குச் சொந்தக்காரர் ஐயா அவர்கள். உழலும்போது மட்டுமல்ல, உறங்கும்போதும் தமிழர் நலனையே கனவு காண்பவர் அவர். காட்சிக்காகவோ, பேச்சுக்காகவோ, மேல்பூச்சாக தொண்டாற்றுபவர். அல்லர். தன்னுடைய உடல், பொருள், உயிர் மட்டுமல்ல, குடும்பத்தினரையும் தமிழுக்காய்த் தாரைவார்த்திருப்பவர். அவரின்…