தீவாக்கிய அலைபேசி – கருமலைத்தமிழாழன்
தீவாக்கிய அலைபேசி செல்லிடக்கை அலைபேசி என்றே இன்று செப்புகின்ற அறிவியலின் பேசி யாலே இல்லத்தில் இருந்தபடி உலகில் எங்கோ இருப்பவரைத் தொடர்புகொண்டு பேசு கின்றோம் செல்கின்ற இடத்திருந்தே வீட்டா ரோடு செய்திகளைப் பரிமாறி மகிழு கின்றோம் எல்லைகளை நாடுகளைக் கடந்தி ருந்தும் எதிர்நின்று பேசுதல்போல் பேசு கின்றோம் ! எழுத்தாலே அனுப்பிவைத்த செய்தி தம்மை ஏற்றவகை படங்களொடு அனுப்ப லானோம் கழுத்துவலி எடுக்கமேசை முன்ன மர்ந்து கணிணியிலே செய்கின்ற பணியை யெல்லாம் அழுத்திவிரல் படுத்தபடி சாய்ந்த மர்ந்தும் அடுத்தஊர்க்குச் செலும்போதும் செய்ய லானோம் பழுதின்றி …
கருமலைத்தமிழாழனின் செப்பேடு – நூலாய்வு : பொன்.குமார், இனிய உதயம்
செப்பேடு ( மரபுக் கவிதை நூல் ) ஆசிரியர் – பாவலர் கருமலைத்தமிழாழன் திறனாய்வு – பொன் குமார் தமிழ்க் கவிதையின் தொடக்கம் மரபுக் கவிதையே. பத்தொன்பதாம் நூற்றாண்டு வரை மரபின் ஆதிக்கம் தொடர்ந்தது. பாரதிக்குப் பின் மாற்றம் ஏற்பட்டது. மரபைப் பின் தள்ளி புதுக்கவிதை முன் சென்றது. மரபுக் கவிதை என்றாலே ஒரு சிலர் மட்டுமே எழுதி ஒரு சிலர் மட்டுமே வாசிக்கும் நிலையில் மரபுக் கவிதை இருந்ததை மாற்றி அனைவரும் வாசிக்கும் வண்ணம் மரபுக் கவிதையை எழுதி …
சொரணையின்றி உள்ளமட்டும் கிடைக்கா உரிமை ! – பாவலர் கருமலைத்தமிழாழன்
சொரணையின்றி உள்ளமட்டும் கிடைக்கா உரிமை ! நீருக்குள் நிழல்தன்னைத் தேடல் போன்று நீர்த்துபோன அரசியலில் நியாயந் தன்னைப் பாருக்குள் கிடைக்குமென்று தேடு கின்றார் பரிதாப ஈழத்துத் தமிழ ரின்று ! வேருக்கு நீருற்றி ஐ.நா மன்றம் வேதனையைத் தீர்த்துவிடும் என்றி ருந்தால் பேருக்குத் தீர்மானம் போட்டோ மென்றே பெயர்த்திட்டார் நம்பிக்கை திட்ட மிட்டே ! பால்தருவார் பசிக்கென்று காத்தி ருக்கும் பச்சிளமைக் குழந்தைகள்போல் ஈழ மக்கள் ஆல்போன்று மன்றம்தாம் நிழலைத் தந்தே அநீதிக்குத் தண்டனைகள் வழங்கு மென்று கால்கடுக்க ஏக்கத்தில் நின்றி ருந்தால் கள்ளிப்பால்…
அமுதசுரபி ஆண்டு விழா
அமுதசுரபி ஆண்டு விழா பங்குனி 27, 2047 / ஏப்பிரல் 09, 2016 சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை இடம் : தவுட்டன் உணவகம்( Doveton Cafe), 5- புரசைவாக்கம் நெடுஞ்சாலை, புரசைவாக்கம், சென்னை நூல்கள் வெளியீடு செப்பேடு பாவலர் கருமலைத்தமிழாழன் மரபுக் கவிதை நூல். அன்புள்ளமே முனைவர் கோமதி கேசவன் புதுக்கவிதை நூல். நம் அமுதசுரபி மாத இதழ் அமுதசுரபி கவிதைகள் முகப்புத்தகத்தில் தேர்ந்தெடுத்த 100 கவிஞர்களின் கவிதைகளின் தொகுப்பு. கவிதை அரங்கம், கலந்துரையாடல்,…
சமத்துவப் பொங்கல் பொங்கிடுவோம்! – பாவலர் கருமலைத்தமிழாழன்
சமத்துவப் பொங்கல் பொங்கிடுவோம்! கழிக்கின்றோம் பழையவற்றைக் காணவாரீர் எனவழைத்தே விழியெரிய நேயத்தை விளையன்பை எரியவைத்தே கழிவென்றே மனிதத்தைக் கருகவைத்துக் கணியன்தன் வழியடைத்துக் கொளுத்துகின்ற வன்முறையா போகியிங்கே ! சாதிமணி உலையிலிட்டுச் சதிவெறியாம் பாலையூற்றி மோதிபகை வளர்வெல்லம் மொத்தமுமாய் அதிலிட்டு வீதிகளில் குருதிவாடை வீசிடவே மனக்குடத்தில் ஆதிக்கம் பொங்வைத்தே ஆடுவதா பொங்கலிங்கே ! காடுகளில் உழைப்பவரை கழனிசேற்றில் புரள்பவரை ஆடுகளின் மந்தையாக அடித்தட்டில் தாழ்ந்தவராய் மாடுகளைப் போல்விரட்டி மனிதகுலம் தலைகுனிய கேடுகளை விளைவிக்கும் கேளிக்கையா காணும்பொங்கல் ! தெருவெல்லாம் அன்பென்னும் தோரணங்கள் கட்டிவைப்போம் கரும்புசுவை மனமேற்றிக்…
உரிய தமிழ் கற்பிப்போம் ! – பாவலர் கருமலைத்தமிழாழன்
தமிழ்படித்தால் பூரித்தே வாழ்ந்திடுவேன்! ஆங்கிலந்தான் அறிவுமொழி ஆங்கி லத்தில் அருங்கல்வி கற்றால்தான் ஏற்றம் என்றே தீங்கான எண்ணத்தில் தமிழர் நாமோ திசைமாறிச் செல்கின்றோம் வழியை விட்டே மாங்குயிலைத் தன்குஞ்சாய் வளர்க்கும் காக்கை மடத்தனம்போல் குழந்தைகளைப் பயிற்று கின்றோம் தாங்குகின்ற வேர்தன்னை மறந்து மேலே தரைதெரியும் மரந்தன்னை புகழு கின்றோம் ! ஆங்கிலத்தைப் படித்தால்நீ பெருமை யோடே அரும்வாழ்வு வாழ்ந்திடலாம் பூலோ கத்தில் பாங்கான சமற்கிருதம் படித்தால் நீயும் பான்மையுடன் வாழ்ந்திடலாம் மேலோ கத்தில் ஏங்குகின்ற படியிந்த இரண்டு மின்றி ஏலாத தமிழ்படிக்கப் போவ தாக…
பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 3/3
பேராசிரியர் இலக்குவனாரின் தமிழ் மீட்பு உணர்வு 3/3 தமிழ்வழிக்கல்வியை வலியுறுத்தியதால் இந்தியப்பாதுகாப்புச் சட்டத்தின்படி சிறைவாழ்க்கை பெற்ற பேராசிரியர்(1965), தமிழ்க்கல்வித்திட்டம் பற்றியும் பின்வருமாறு அகநானூற்றுப் பாடல் 55 இல் வரும் வெண்ணிப்போர் விளக்கம் மூலம் வலியுறுத்துகிறார். வெண்ணிப்போர்: ‘வெண்ணி’ , ‘கோவில் வெண்ணி’ என்ற பெயரின் சுருக்கமாகும். இது தஞ்சாவூர் மாவட்டத்தில் இன்றும் உள்ளது. . . . இங்கு நடந்த போரைப்பற்றி புலவர்கள் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளனர். வரலாற்றுப் புகழ் வாய்ந்தது. ஆயினும் நம் தமிழ் மாணவர்கள் மேனாட்டில் நடைபெற்ற போர்களைப்…
நம்மொழியை நாமறிவோம்! – பாவலர் கருமலைத்தமிழாழன்
நம்மொழியை நாமறிவோம்! இத்தாலி நாட்டிலிருந் திங்கே வந்து இயேசுபிரான் கருத்துகளைப் பரப்பு தற்கே முத்தான தமிழ்மொழியைப் பேசக் கற்று முதலில்தம் பெசுகியெனும் பெயரை மாற்றித் தித்திக்க வீரமா முனிவ ரென்று திருத்தமுறத் தமிழினிலே சூட்டிக் கொண்டு வித்தாகக் கிறித்துவத்தை விதைப்ப தற்கே வீதிகளில் மதக்கருத்தை உரைத்து வந்தார் ! ஓரிடத்தில் உரையாற்றும் போது பேச்சில் ஒருகோழி தன்னுடைய குட்டி தன்னைப் போரிட்டுக் காப்பதைப்போல் என்றே உவமை பொருத்திச்சொல்லக் கேட்டமக்கள் சிரித்து விட்டார் கூறியதில் தவறேதோ உள்ள தென்று கூட்டத்தைப் பார்த்தவரும் கேட்கும் போது…
நந்தமிழர் நாடெல்லாம் தமிழே பேசும்! – பாவலர் கருமலைத் தமிழாழன்
விடியலென நீயெ ழுந்தால் ! அஞ்சியஞ்சி வாழ்கின்ற அவலம் நீங்கும் அதிகார ஆர்ப்பாட்ட அல்லல் நீங்கும் விஞ்சிநிற்கும் கையூட்டின் நஞ்சு நீங்கும் விளைந்திருக்கும் ஊழல்முட் புதர்கள் நீங்கும் கெஞ்சிநின்று கால்வீழும் கொடுமை நீங்கும் கேடுகளே நிறைந்திருக்கும் ஆட்சி நீங்கும் கொஞ்சுமெழில் இன்பமுடன் நலங்கள் வாழ்வில் கொலுவேறும் விடியலென நீயெ ழுந்தால் ! செந்தமிழே கோலோச்சும் ! துறைகள் தோறும் செழிக்கின்ற ஆட்சியாகும் ! செவ்வாய் செல்லும் சிந்தனையின் அறிவியலும் தமிழே யாகும் சிரிக்கின்ற மழலைவாய் அம்மா வாகும் சந்தமிகு தமிழ்வழியில் கல்வி யாகும் சதிராடும்…
தமிழா எங்கே உன் தாய்? – பாவலர் கருமலைத்தமிழாழன்
உறுதி ஏற்பாய் ! அன்னையினை இழிவுசெய்யும் தமிழா ! வீட்டில் அருந்தமிழைக் கொலைசெய்யும் தமிழா ! நாட்டில் உன்மொழியை ஏளனமாய்ப் பேசிப் பேசி உயர்மொழியைத் தாழ்வுசெய்து கீழ்மை யானாய் முன்னோர்கள் வழிவழியாய்ப் பேணிக் காத்த முத்தமிழில் பிறமொழியின் மாசைச் சேர்த்து விண்வெளியில் ஓசோனைக் கெடுத்த தைப்போல் விளைவித்தாய் ஊறுதனைத் தூய்மை நீக்கி ! வீட்டிற்குள் புதையலினை வைத்துக் கொண்டு வீதியிலே எச்சிலிலை பொறுக்கு கின்றாய் காட்டிற்கே எரித்தநிலா போன்று சங்கக் கவின்நூல்கள் வீணாகக் கிடக்கு திங்கே…
