உள்ளமெல்லாம் தமிழுணர்வு பொங்கச் செய்யும் உயரியநூல் திருத்தமிழ்ப்பாவை     – அணிந்துரை வெல்க தமிழ்!   பாவலர் வேணு.குணசேகரன் அவர்கள் இயற்றிய ‘திருத்தமிழ்ப்பாவை’  உங்கள் கைகளில் தவழ்கிறது.   திருமாலைத் தொழுது ஏத்தும் இறைபடியார்க்குத் ‘திருப்பாவை’ எத்துணைச் சிறப்பு வாய்ந்ததோ, சிவபெருமானை வழுத்தும் இறையன்பர்க்குத் ‘திருவெம்பாவை’ எவ்வளவு சிறப்பு மிக்கதோ, அவ்வளவு சிறப்பும் சீர்மையும் கொண்டதாகத் தமிழன்பர் அனைவரும் கொண்டாட வேண்டிய நூல் இந்தத் ’திருத்தமிழ்ப்பாவை’ என்பதனை இந்நூல் கற்று முடிந்தவுடன் நீங்கள் உணர்வீர்கள்.   இன்றைய காலச்சூழல் ஒரு விந்தையான சூழல் என்பதனைத்…