பாவாணரின் ஆய்வு முடிவுகள் மெய்யாகி வருகின்றன! – ப. மருதநாயகம்
(தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 19/ 69 இன் தொடர்ச்சி) தமிழ் ஆய்வின் விடிவெள்ளி பேராசிரியர் ப. மருதநாயகம் 20/ 69 தேவநேயப் பாவாணர்: சொல்லாய்வும் சொல்லாடலும் (2017) தமிழின் தொன்மை, தனித்தன்மை, மூல மொழியாகும் தாய்மை, பிற மொழிகள் கடன்பெற்ற சொல்வளம் முதலியவற்றை பாவாணர் வாழ்ந்த காலத்துப் புறப்பகைவர்களும் அகப்பகைவர்களும் எள்ளி நகையாடினர். ஆனால், இன்றைக்கு உலக அறிஞர்கள் அவற்றை ஏற்றுப் போற்றுகின்றனர். இச்செய்தியைக் குறிப்பிடும் பேரா.ப.மருதநாயகம், கடந்த முப்பது ஆண்டுகளாக மேலைநாட்டு மொழியியல் அறிஞர்களால் ஆய்வு மேற்கொண்டு ஏற்கப்பெற்ற…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙோ) – இலக்குவனார் திருவள்ளுவன்
[தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙொ) தொடர்ச்சி] தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் (ஙீஙோ) தம் உடல் நலனைக்கருதாமல் தமிழ் நலனைக் கருதி வாழ்ந்த பேராசிரியர் இலக்குவனாருக்குத் திடீர் நலக்குறைவு ஏற்பட்டது. செருப்புக் கடியால் காலில் ஏற்பட்ட புண் உடனே கவனிக்கப்படாமையால் முற்றி விட்டது; மருத்துவமனையில் சேர்ந்தார். பேராசிரியருக்கு நீரிழிவு நோய் உண்டு. அதனால் புண் புரையோடிப் போனதை மருத்துவர்களே கவனிக்கவில்லை. முருகன் தம்மைக் காப்பாற்றுவான் என்ற நம்பிக்கையில் இருந்த பேராசிரியர் நம்பிக்கை இழந்தார். தமிழுக்காக ஆற்ற வேண்டிய பணிகள் இன்னும் உள்ளனவே எனக் கருதினார்….
தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 4 – ஞா.தேவநேயர்
(தமிழின் தனிப்பெருந் தன்மைகள் 3 தொடர்ச்சி) தமிழின் தனிப்பெருந் தன்மைகள் தூய்மை தமிழ் குமரிநாட்டில் தானே தோன்றி வளர்ந்த தனிமொழியாதலாலும், அதை நுண்ணறிவு மிக்க பொதுமக்களும் புலமக்களும் பண்படுத்தி வளர்த்தமையாலும், நீராவியையும் மின்னியத்தையும் துணைக் கொள்ளாத எல்லாக் கலைகளையும் அறிவியல்களையும் பண்டைத் தமிழரே கண்டறிந்துவிட்டமையாலும், ஆயிரக்கணக்கான உலக வழக்குச் சொற்களும் நூல் வழக்குச் சொற்களும் இறந்துபட்ட இக்காலத்தும், எப்பொருள்பற்றியும், பழஞ்சொற் கொண்டும் புதுச்சொற் புனைந்தும், முழுத் தூய்மையாகப் பேசத் தமிழ் ஒன்றில்தான் இயலும். இவ் வுண்மையை அறிந்தே, தமிழ் வடமொழித் துணையின்றித் தனித்து…
தாயினுஞ் சிறந்தது தமிழே! – ஞா.தேவநேயப் பாவாணர்
தாயினுஞ் சிறந்தது தமிழே! எமுனாகல்யாணி – ஆதி தாயினுஞ் சிறந்தது தமிழே தரணியி லுயர்ந்தது தமிழே வாயுடன் பிறந்தது தமிழே வாழ்வெல்லாந் தொடர்வது தமிழே. பாலூட்டி வளர்த்ததும் தமிழே தாலாட்டி வளர்த்ததும் தமிழே பாராட்டி வளர்த்ததும் தமிழே சீராட்டி வளர்த்ததும் தமிழே தேம்படு மழலையுந் தமிழே திருந்திய வுரைகளும் தமிழே தேம்பி யழுததுந் தமிழே தேவையைக் கேட்டதும் தமிழே முந்தி நினைந்தலும் தமிழே முந்தி மொழிந்ததும் தமிழே குந்தி யெழுந்ததும் தமிழே குலவி மகிழ்ந்ததுந் தமிழே பயன்படு கல்வியும் தமிழே பணிபெறப் படுவதும் தமிழே…
ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 2/9 : பெங்களூரு முத்துச்செல்வன்
(ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 1/9 தொடர்ச்சி) ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 2/9 தந்தை பெரியார் குறிப்பிட்டுள்ள ‘பிராமணீய நாயக’த்தின் பயன்கள் தேவைப்படாத பெரியாரியலார், இந்துத்துவத்தை நிலைநாட்டத் துடிக்கும் பிராமணச் சூழ்ச்சிகளை உடனுக்குடன் தயக்கமும் மயக்கமும் இன்றித் தோலுரித்துக் காட்ட முற்படுகின்றனர். இன்றைக்கும் திராவிடர் கழகத்தின் தேவையை உணர்த்துவதாக அவ்வரிகள் அமைந்துள்ளன. இந்துத் தேசியத்தின் ஒரு கூறாகிய சமற்கிருதத் திணிப்புக் குறித்துத் தந்தை பெரியாரின் கருத்துகளைப் பார்ப்போம். “இந்த நாட்டில் பலகாலமாகச் ‘சமற்கிருதம்’…
சி.இலக்குவனார் – சில நினைவுகள் : தீக்கதிர்
சி.இலக்குவனார் – சில நினைவுகள் “ஆறடி வளர்ந்த நல்ல ஆண்மையர் தோற்றம் விஞ்சம் மாறனோ ஆரன் தானோ மற்றெனின் சேரர்கோனோ வீறுடன் நீண்டமேலாடை வீசுகை முழந்தாள்தோய ஏறுபோல் நிமிர்ந்து செல்லும் இலக்குவனார்…” என்னும் மொழிஞாயிறு ஞா.தேவநேயப்பாவாணர் அவர்களின் நயமிகு பாடலடிகள் இலக்குவனாரை உள்ளத்திரையில் பதியவைக்கும். இலட்சுமணன் எனத் தமது பெற்றோரால் பெயரிடப்பட்டிருந்தவர், பள்ளிப்பருவத்தில், தமது தமிழாசான் சாமி. சிதம்பரனார் வழங்கிய அறிவுரையால், இலக்குவன் எனத் தமிழ்மணம் கமழும் பெயராக மாற்றிக் கொண்டார். “இராமனை ஏற்றுக்கொள்ளாத கருஞ்சட்டைக்காரனாகிய நீ இலட்சுமணன் எனப் பெயர் வைத்துக்கொள்வதேன்?” எனத்…
நாகரிகத்திற்கும் பண்பாட்டிற்கும் வேறுபாடு – பாவாணர்
அகச் செம்மை பண்பாடு; புறச் செம்மை நாகரிகம் நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை. அது எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன்படுத்துவது. பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம். அது எல்லாப் பொருள்களையும் தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்துவது. இலக்கணப் பிழையின்றிப் பேசுவதும், எல்லாவகையிலும் துப்புரவாயிருப்பதும், காற்றோட்டமுள்ளதும் உடல் நலத்திற் கேற்றதுமான வீட்டிற் குடியிருப்பதும், நன்றாய்ச் சமைத்து உண்பதும், பிறருக்குத் தீங்கு செய்யாமையும், நாகரிகக் கூறுகளாம்; எளியாரிடத்தும் இனிதாகப் பேசுவதும், புதிதாய் வந்த ஒழுக்க முள்ள அயலாரை விருந்தோம்புவதும், இரப்போர்க்கிடுவதும், இயன்றவரை பிறருக்குதவுவதும், கொள்கையும் மானமுங் கெடின் உயிரை…
தமிழ் தேவ தேவ மொழி
வடமொழி தேவமொழியென்னும் காலம் மலையேறிவிட்டது. தமிழ் வடமொழிக்கும் மூலமாதலால் வடமொழியைத் தேவமொழியெனின் தமிழைத் தேவ தேவ மொழியெனல் வேண்டும். – மொழி ஞாயிறு தேவநேயப்பாவாணர், தமிழ் இலக்கிய வரலாறு : பக்கம் 301
இந்தியை ஏன் கற்க வேண்டும் ? – பாவாணர்
தமிழ் மாணவன் தன் பெற்றோரை வினவல் “கழுகுமலை குருவிகுளம்” என்ற மெட்டு வகை ப. இந்தியை ஏன்கற்க வேண்டும் என்அம்மா என்அப்பா நான் (இந்தி) உ.1 என்கருத்தைத் தெரிவிக்க என்மொழி யொன்றில்லையா பொன்மணிபோற் சொற்களே பொலியுந்தமிழ் இருக்கையிலே (இந்தி) 2 அறிவியற்கே ஆங்கிலம் அளவில்லாநூல் அளிக்கவும் வெறுமையுற்ற கலமென விழுமியநூல் எதுமிலாத (இந்தி) 3 அடிமைநாளில் அயன்மொழி அறிந்துவந்தோம் என்கின்றார் உரிமைவந்த பின்னரும் உறவில்லாத வடநிலத்து (இந்தி) 4 வரவரவே…