பாவேந்தர் பள்ளியில் ஓவியப் போட்டியும் பரிசும்
பாவேந்தர் பள்ளியின் மாணவர் அணியின் சார்பில் பாவேந்தர் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு ஓவியப் போட்டி நடந்தது. இயற்கையைப் போற்றும் வகையில், குளிர்காலத்தை வரவேற்கும் நோக்கில் ‘சிற்றூர்’ எனும் தலைப்பில் ஓவியப் போட்டி நடத்தப்பட்டது. 4, 5ஆம் நிலை மாணவர்கள் அனைவரும் பங்கேற்றனர். மாணவர் அணியைச் சார்ந்த த. நவீன், ந. கோபி, தருண், ஆ.பாபு போட்டியை நடத்தினர். போட்டியில் வெற்றிபெற்றோர் ச.மோ. துர்கா, தே.ரா. தினேசு, வா.சி. யாமின், வ.கு. சந்தோசு, அ.இ. மணிகண்டன் ஆகிய மாணவர்களுக்கு வெற்றிப்…
பள்ளி மாணவர்களுக்கான சித்த மருத்துவ ஆய்வு
குன்றத்தூர் பாவேந்தர் தமிழ்வழிப் பள்ளியில் கடந்த 30.11.2013 காரிக்கிழமையன்று பள்ளி குழந்தைகளுக்கான சித்த மருத்துவ ஆய்வு நடந்தது. சித்த மருத்துவர்கள் – மரு. மகேந்திரன் (சித்த மருத்துவ முதுவர்) மரு. தாமோதரன் (சித்த மருத்துவ முதுவர்) மரு. செயப்பிரதாப் (சித்த மருத்துவ இளவர்) வந்திருந்து மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்டு மருந்ததுகளை வழங்கினர். குன்றத்தூர் சீபா மருத்துவ ஆய்வகத்தினர் தேவையானவர்களுக்குக் குருதி, சருக்கரை, கொழுப்பு… போன்ற ஆய்வுகளை மேற்கொண்டு உதவினர். மருத்துவ ஆய்வில் 150 பள்ளிக் குழந்தைகளும் 200க்கும் மேற்பட்ட பொது மக்களும் பங்கேற்றுப்…