என் தமிழ்ப்பணி, புலவர் கா. கோவிந்தனார், 01. பதிப்பரை
என் தமிழ்ப்பணி பதிப்புரை இருபதாம் நூற்றாண்டுத் தமிழகத்தின் வரலாற்றில் ஒரு சிறப்பிடத்தைப் பெறத்தக்க வகையில், நல்ல தமிழ் அறிஞராக, வரலாற்றுத் திறனாய்வாளராக, செந்தமிழ்ப் பேச்சாளராக, இலக்கியப் படைப்பாளராக, பாதை மாறாத பகுத்தறிவுவாதியாக, அப்பழுக்கற்ற அரசியல் தலைவராக, தமிழ்நாடு சட்டமன்றப் பேரவைத் தலைவராக, என பல்திறன் படைத்த நற்றமிழ்ப் புலவராக விளங்கியவர், புலவர் கா. கோவிந்தனார் அவர்கள் “தமிழுக்கும், தமிழ்ப் புலவர்கட்கும், தமிழ் நாட்டுக்கும் தொண்டாற்றத் தன்னையே அருப்பணித்தவர்” என்று பேரறிஞர் அண்ணா அவர்களால் பாராட்டப்பெற்ற பேறு பெற்றவர், பைந்தமிழ்ப் புலவராய் உயர்ந்து, சங்கத் தமிழ்…
பாவேந்தரும் பொதுவுடைமையும் 3/4 – முனைவர் நா.இளங்கோ
(பாவேந்தரும் பொதுவுடைமையும் 2/4 தொடர்ச்சி) பாவேந்தரும் பொதுவுடைமையும் 3/4 1940 தொடங்கிப் பாவேந்தர் தம்மை முழுமையான திராவிட இயக்கக் கவிஞராக, தமிழ்த் தேசியம் நாடும் கவிஞராக, தனித் தமிழ்நாடு அல்லது தனித் திராவிடநாடு கோரும் கவிஞராகத் தம்மை அடையாளப் படுத்திக்கொண்டார். ஆனாலும் தாம் சார்ந்த தன்மதிப்பு(சுயமரியாதை) இயக்கம் காண விரும்பும் குமுகாயமாக அவர் சமத்துவக் குமுகாயத்தைக் காட்டத் தவறியதே இல்லை. பாவேந்தர் பாடல்கள் வழி ஊற்றம் பெற்ற திராவிட இயக்கத்தினர் அனைவரும் பொதுவுடைமைச் சமூகமே, திராவிட இயக்கத்தின் குறிக்கோள் என்பதாக உணர்ந்தார்கள். ஆனால்…
தமிழியக்கக் கனல் மூட்டிய பாரதிதாசன்! – கவிக்கோ ஞானச்செல்வன்
தமிழியக்கக் கனல் மூட்டியவர் நீருக்குள் போட்டதொரு கல்லைப் போல நெஞ்சுக்குள் கிடந்ததொரு தமிழின் பற்றை ஆர்தடுத்து நின்றாலும் அஞ்சேன் என்றே ஆர்த்தெழுந்து மேலோங்கச் செய்த செம்மல்! பேருக்குத் தமிழென்று நெஞ்சில் வைத்துப் பேசுவதால் பயனொன்றும் இல்லை யென்று போருக்குப் புறப்படுவோம் தமிழுக் காகப் புறங்கொடோம் என்றறைந்த புரட்சிக் காரர்! மங்காத தமிழெங்கள் வளமும் வாழ்வும் மாநிலத்தில் தமிழ்க்கீடு மற்றொன் றில்லை! சங்கேநீ முழங்கிதனை!தாழா இன்பம் தமிழின்பம் தனையன்றிப் பிறிதொன் றில்லை! மங்கைதரும் சுகங்கூடத் தமிழுக்கு கீடோ? மலர்மணமும் குளிர்நிலவும் கனியும் சாறும் செங்கரும்பும்…
தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க! – (உ)லோக நாதன்
தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க! தமிழே ஆதித் தாயே வாழ்க! தமிழர்க் கெல்லாம் உயிரே வாழ்க! தமிழ் நாட்டுக்கும் பிற நாட்டுக்கும் அமிழ்தாய் அமைந்த ஐயா வாழ்க! ஊரில் தமிழன் மார்பைத் தட்டிப் பாரில் தமிழன் நானே என்னும் சீரைத் தந்த தமிழே வாழ்க! ஓரா உலகின் ஒளியே வாழ்க! (உ)லோக நாதன்
செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை! – தமிழ நம்பி
செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை! நீயே, செந்தமிழ் உடல்உயிர் சேர்உரு வாயினை! ஆயநற் றமிழ்வாழ் அருந்தூய் நெஞ்சினை! வெம்புலி உறுமலில் வேழப் பிளிறலில் செம்மை சேருயர் செழுந்தமிழ் காத்தனை! உறங்கிக் கிடந்த ஒருதனித் தமிழினம் இறவா மொழியால் எழுந்திடப் பாடினை! ஒற்றைத் தனியாய் ஒண்டமிழ் ஏந்தி முற்றுவல் லுரத்தொடு மும்முர உறுதியில் தளர்நெகிழ் வின்றித் தாக்கிப் பொருதை! கிளர்ந்தெழ முழக்கியித் தமிழரை முடுக்கினை! புதுவை பொரித்த புரட்சிக் குயிலே! எதுவும் யாரும் இணையுனக் கில்லை! ‘முனைதமிழ்க் கொருசிறு தினைத்துணை நலஞ்சேர் வினைசா வெனின்அச் சாநாள்…
தவமைந்தர் பாவேந்தர் பணிகள் வெல்க! – கவிக்கோ ஞானச்செல்வன்
தவமைந்தர் பாவேந்தர் பணிகள் வெல்க! நீருக்குள் போட்டதொரு கல்லைப் போல நெஞ்சுக்குள் கிடந்ததொரு தமிழின் பற்றை ஆர்தடுத்து நின்றாலும் அஞ்சேன் என்றே ஆர்த்தெழுந்து மேலோங்கச் செய்த செம்மல்! பேருக்குத் தமிழென்று நெஞ்சில் வைத்துப் பேசுவதால் பயனொன்றும் இல்லை யென்று போருக்குப் புறப்படுவோம் தமிழுக் காகப் புறங்கொடோம் என்றறைந்த புரட்சிக் காரர்! மங்காத தமிழெங்கள் வளமும் வாழ்வும் மாநிலத்தில் தமிழ்க்கீடு மற்றொன்றில் றில்லை! சங்கேநீ முழங்கிதனை!தாழா இன்பம் தமிழின்பம் தனையன்றிப் பிறிதொன் றில்லை! மங்கைதரும் சுகங்கூடத் தமிழுக்கு கீடோ? மலர்மணமும் குளிர்நிலவும் கனியும் சாறும் செங்கரும்பும்…
சிங்கப்பூர் தமிழ் இலக்கியக் களம் :பாவேந்தர் 126 : சிங்கப்பூர்
பங்குனி 28, 2047 / ஏப்பிரல் 10, 2016 காலை 9.45 விக்குடோரியா சாலை, சிங்கப்பூர்
என்றைக்குமே இன்பம் நிலைகொள்ள வேண்டும்
செங்கதிர் எழுந்ததடி எங்கும் ஒளி ஆனதடி பொங்கல்திரு நாளடியே என்னருந் தோழி — அதோ பொன்னரிவாள் ஏந்திவிட்டார் என்னருந்தோழி தெங்கில்இளம் பாளையைப் போல் செந்நெல்அறுத் தார் உழவர் அங்குக்களம் கொண்டடித்தார் என்னருந் தோழி — அவர் சங்கத் தமிழ் பாடிப்பாடி என்னருந்தோழி. கட்டடித்தே நெல்லளந்தே கட்டை வண்டி ஏற்றுகின்றார் தொட்டளித்தார் தைப்புதுநெல் என்னருந் தோழி — அவர் தோளை வையம் வாழ்த்திற்றடி என்னருந்தோழி. கொட்டு முழக் கோடு நெல்லைக் குற்றுகின்ற மாத ரெல்லாம் பட்டுடை இழுத்துக் கட்டி என்னருந் தோழி — பாடும் பாட்டெல்லாம்…