இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம்! அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்!
சென்னை இந்திப் பிரசார சபை முன்பாக இந்தித் திணிப்பு ஆணை எரிப்புப் போராட்டம்! அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்! இடம்: இந்திப் பிரச்சார சபை, தியாகராயர் நகர், சென்னை. காலம்: தி.பி. 2048 – சித்திரை 25 (08.05.2017) திங்கள் காலை 10 மணி தலைமை : தோழர் கி. வேங்கடராமன் பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். இந்தி மொழியைத் தமிழ்நாட்டின் கல்வி மொழியாக, பேச்சு மொழியாகத் திணித்திடப் பா.ச.க.அரசு கடற்புயல்(சுனாமி) வேகத்தில் செயல்படுகிறது. அதே வேகத்தில் தமிழைப் புறந் தள்ளித் தீர்த்துக் கட்டவும் முயல்கிறது. அண்மையில் பா.ச.க. அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தில், தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் முதல் கட்டமாக நடுவண் பள்ளிக் கல்விவாரியப் (C.B.S.E.) பள்ளிகளிலும், கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளிலும் 1 முதல் 10ஆம் வகுப்பு வரை இந்தி கட்டாய மொழிப்பாடமாக்கப்படும் என்று…
மனிதச் சங்கிலியில் கை கோப்போம்! – சுப.வீரபாண்டியன் அறிக்கை
மனிதச் சங்கிலியில் கை கோப்போம்! 500, 1000 உரூபாய்த் தாள்களைச் செல்லாது என்று அறிவித்து, ஏழை, எளிய மக்களைப் பெரும் இன்னலுக்குஆளாக்கியுள்ள, தலைமையர் நரேந்திரர்(மோடி) தலைமையிலான மத்திய அரசைக் கண்டித்து, தி.மு.கழகம் வரும் 24ஆம் நாள், தமிழ்நாடு முழுவதும் மனிதச் சங்கிலிப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளது. இதனைத் திராவிட இயக்கத்தமிழர் பேரவை முழுமையாக ஆதரித்து வரவேற்பதுடன், பேரவையின் தோழர்கள் அனைவரும் இந்த மனிதச்சங்கிலிப் போராட்டத்தில் கைகோத்து நிற்க முடிவெடுத்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கின்றோம். ஆகவே, தோழர்களே மனிதச்சங்கிலியில் திரளாகக் கலந்துகொண்டு கை கோத்து இணைய வேண்டுகிறோம். …
பணத்தாள் செல்லாமை ஆக்கியமையைக் கண்டித்து மாபெரும் மனிதச்சங்கிலி – கருணாநிதி அறிவிப்பு
பணத்தாள் செல்லாமை ஆக்கியமையைக் கண்டித்து மாபெரும் மனிதச்சங்கிலி – கருணாநிதி அறிவிப்பு பணத்தாள்கள் செல்லாதென அறிவித்ததால் ஏற்பட்டுள்ளஇன்னல்களுக்கு காரணமான மத்திய அரசைக் கண்டித்துத் தமிழகம் முழுவதும் தி.மு. கழகத்தின் சார்பில் கார்த்திகை 09, 2047 / நவ. 24 – அன்று மாபெரும் மனிதச் சங்கிலி நடைபெறும் எனத் தி.மு.க. தலைவர் கருணாநிதி அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில், “மத்திய பா.ச.க. அரசு, ‘அவசரக்கோலத்தில் அள்ளித் தெளி’ என்பதைப் போல எந்தவிதமான முன்னேற்பாடோ, உரிய வகையிலான திட்டமோ இல்லாமல்,…
ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 1/9 – பெங்களூரு முத்துச்செல்வன்
ஆரியச் சூழ்ச்சியும் தந்தை பெரியார் காட்டும் வழியும் 1/9 சாதிப்பிரிவு கூடாது என்பதுதான் நம் எண்ணம். இருப்பினும் பிராமணீயம் செல்வாக்குடன் திகழ்ந்து சமற்கிருதத்திணிப்பில் தொடர்ந்து ஈடுபடுகையில் நாம் அமைதி காத்துப் பயனில்லை. இந்த நேரத்தில் ஆரியச் சூழ்ச்சி குறித்துப் பெரியார் எச்சரித்த சிலவும் தொடர்பான சில கருத்துகளும் நினைவிற்கு வருகின்றன. அவற்றை இங்கே பகிர்கின்றேன். தந்தை பெரியார், ‘சமசுகிருதம் ஏன்‘ என்னும் தலைப்பில்(15–02–1960) விடுதலையில் பின்வருமாறு எச்சரித்துள்ளார். “இன்று இந்த நாட்டில் நடைபெறும் ஆட்சியானது, ‘சனநாயகக் குடியரசு’ என்னும் போலிப்…