மனங்கலங்க வேண்டா மாற்றணியினர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
மனங்கலங்க வேண்டா மாற்றணியினர்! கான முயலெய்த அம்பினில் யானை பிழைத்தவேல் ஏந்தல் இனிது. (திருவள்ளுவர், திருக்குறள் 772) தமிழகச் சட்டமன்றங்களில் தொடர்ந்து இரு கட்சிகளின் முதன்மைகளுக்கு மாறாக அவ்வப்பொழுது 3 ஆம் அணி உருவாக்கம்பற்றிய பேச்சும் முயற்சியும் வந்துபோகும். என்றாலும், இந்தமுறை சீர்குலைப்பு முயற்சிகளையும் மீறி மக்கள்நலக்கூட்டணி உருவானது. முன்பு இருந்த சூழலைவிட இம்முறை மக்கள் பெரிதும் மாற்றத்தை விரும்பியது உண்மை. இருப்பினும் மக்களின் நேர்மை உணர்வு அதற்கு எதிராக அமைந்துவிட்டது. முதலில் பணம் கொடுத்தவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று ஒரு…
மாற்றத்தை விரும்பும் மக்கள் – திருவாரூர்ச்செல்வன்
மாற்றத்தை விரும்பும் மக்கள் கடந்த தேர்தல்களைவிட இத்தேர்தலில் மக்கள் மனநிலை மாறியுள்ளது. பொதுவாக இதற்குமுன்பும் மக்கள் ஆட்சி மாற்றத்தை விரும்பினர். ஆனால் அவர் இல்லாவிட்டால் இவர், இவர் இல்லாவிட்டால் அவர் என்பதுபோல், முந்தையத் தேர்தலில் புறக்கணித்தவரை இந்தத் தேர்தலில் புறக்கணித்தும் இந்தத் தேர்தலில் புறக்கணிப்பவரை அடுத்தத் தேர்தலில் வரவேற்றும் மாற்றத்தை வெளி்ப்படுத்தினர். இத்தகைய போக்கே இருமுதன்மைக் கட்சிகளுக்கும் திருந்திய பாதையில் நடைபோடாமல் முந்தைய குற்றப்பாதையிலேயே விரைந்து செல்லும் தன்மையை உருவாக்கியது. இதனால்தான் மக்கள் எதிர்த்தாலும் அரசே மதுவை விற்றல், தமிழ்வழிப்பள்ளிகளை மூடல்,…
முன்னேற்றப்பாதையில் மக்கள்நலக்கூட்டணி – இலக்குவனார் திருவள்ளுவன்
முன்னேற்றப்பாதையில் மக்கள்நலக்கூட்டணி வழக்கமாக இரு கட்சிகளுக்கு வாக்களிப்போரில் பலரிடம் மாற்று எண்ணம் தோன்றியுள்ளது என்பதை மறுப்பதற்கில்லை. இதற்கு முன்பும் இத்தகைய எண்ணம் தோன்றி, ஆனால், நம்பிக்கையின்றி முதன்மைக்கட்சிகளில் ஒன்றிற்கே வாக்களித்தனர். இந்த முறை, வெற்றி பெறுவார்களா என எண்ணாமல் மக்கள் மன மாற்றத்தை முதலிரு கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவாவது மாற்றி வாக்களிக்க எண்ணியுள்ளார்கள். இந்த மாற்று எண்ணத்தை அறுவடை செய்வதில் முதலிடம் மக்கள் நலக்கூட்டணிக்கு உள்ளது. எல்லாக் கட்சிகளும் மாறிமாறி, முதலிரு கட்சிகளுடன் கூட்டணி வைத்துவிட்டு இப்பொழுது…
மக்கள் மனத்தில் மதில்மேல் பூனையாகப் பாராட்டுக்குரிய பா.ம.க. – இலக்குவனார் திருவள்ளுவன்
மக்கள் மனத்தில் மதில்மேல் பூனையாகப் பாராட்டுக்குரிய பாமக “வன்னியர் வாக்கு அன்னியர்க்கில்லை” என்பதையே உரமாகக் கொண்டு உருவானதுதான் பாமக. சாதிவெறிப் பேச்சுகளை உரமாக இட்டுவளர்ந்ததுதான் பாமக. என்றாலும் அரசியலில் நிலைப்பதற்கு இவை உதவா என்பதை உணர்ந்தபொழுது சாதிக்கண்ணோட்டத்தை மாற்றிக் கொண்டதும் பாமகதான். தொல்தமிழர்கள், அருந்ததியினர், பழங்குடியினர் வகுப்புகளைச் சார்ந்தவர்களுக்குக் கட்சியில் பொறுப்புகள், அமைச்சர் பொறுப்புகள் வழங்கியதும் பிற இனத்தலைவர்களின் திருவுருவங்கள், மணிமண்டபம் போன்றவற்றை அமைத்ததும் திறந்து வைத்ததும் பாமகதான். மாறியது பாமக, மாற்றியது மரு.இராமதாசு! புகைபிடித்தலைக் கட்டுக்குக் கொண்டுவர முயற்சிகள்…
தேர்தலில் ஆள்பவர்களையும் ஆண்டவர்களையும் புறக்கணிப்பீர்! – இலக்குவனார் திருவள்ளுவன்
தேர்தலில் ஆள்பவர்களையும் ஆண்டவர்களையும் புறக்கணிப்பீர்! நிகழ இருக்கின்ற சட்டமன்றத்தேர்தலில்(2016) பன்முனைப் போட்டிகள் உள்ளன. ஒவ்வோர் அணியும் நம்பிக்கையுடன் உள்ளதாகத்தான் கருத்துகளை வெளிப்படுத்துகின்றன. இருப்பினும் தேர்தல் நெருங்க நெருங்க இப்போதைய சூழலில் மாற்றம் ஏற்படும். எனவே, சிலர் நம்பிக்கைகள் பொய்த்துப்போகும். சிலர் எதிர்பார்த்ததைவிட வாக்குகள் கூடுதலாக வாங்கலாம். கூட்டணியாகப் போட்டியிடாத கட்சிகளும் தேர்தலுக்குப்பின் புதிய கூட்டணி அமைக்கலாம். எனினும் இன்றைய நம் கடமை, யாருக்கு நம் மதிப்பார்நத வாக்குகளை அளிக்க வேண்டும் என ஆராய்ந்து வாக்குரிமையைப் பயன்படுத்துவதுதான். யார் வெற்றி பெற்றால் என்ன…
ஐம்பது ஆண்டுகளில் திராவிடக் கட்சிகள் செய்யாததை ஐந்து ஆண்டுகளில் செய்வேன்! – அன்புமணி
ஐம்பது ஆண்டுகளில் திராவிடக் கட்சிகள் செய்யாததை ஐந்து ஆண்டுகளில் செய்வேன்! – அன்புமணி உறுதிமொழி! “ஐம்பது ஆண்டுகளில் திராவிடக் கட்சிகள் செய்யாததை – எனக்கு ஒரு வாய்ப்பு கொடுங்கள் – ஐந்து ஆண்டுகளில் செய்து முடிப்பேன்” என்று அன்புமணி இராமதாசு கூறினார். சென்னை வண்டலூரில் மாசி 15, 2047 / பிப்பிரவரி 27 ஆம் நாள் அன்று நடைபெற்ற பா.ம.க மாநில மாநாட்டில் மக்களவை உறுப்பினரும், பா.ம.க முதல்வர் வேட்பாளருமான அன்புமணி இராமதாசு பேசியதாவது: “இது வரலாறு படைக்கின்ற மாநாடு….
பா.ம.க. மாநில மாநாடு 27- ஆம் நாளுக்கு ஒத்திவைப்பு: இராமதாசு
வண்டலூரில் நாளை நடைபெற இருந்த பா.ம.க. மாநில மாநாடு 27- ஆம் நாளுக்கு ஒத்திவைப்பு: இராமதாசு அறிவிப்பு பா.ம.க. நிறுவனர் மரு.இராமதாசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்கான பா.ம.க. மாநில மாநாடு 14-ஆம் நாள் சென்னையை அடுத்த வண்டலூரில் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வந்த நிலையில், இம்மாநாட்டை எப்படியாவது தடுத்துவிடவேண்டும் என்ற நோக்கத்துடன் மாநாட்டுக்கு உயர்நீதுிமன்றம் அளித்த இசைவை எதிர்த்து உயர்நீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் அ.தி.மு.க. அரசு மேல்முறையீடு செய்தது….
மகளிர் கூட்டம் – மதுவை ஒழிக்கும் மாநாட்டில் பங்கேற்பீர்!
மதுவை ஒழிக்கும் மாநாட்டில் பங்கேற்பீர் மகளிர் கூட்டம்- மாசி 02, 2017/14.2.2016 கோ.க.மணி வேண்டுகோள்! ஆய்வுக் கருத்து தமிழ்நாட்டின் மொத்தக் கைம்பெண்கள் 22 , 33,000பேர். இதில் 90% மது குடிகாரர் இறந்ததால் விதவை. தமிழ்நாட்டில் சாராயம், பீர், பிராந்தி போன்ற மதுவின் கொடுமை சொல்லி மாளாது. மதுவினால் 60 வகையான நோய்கள் வருகின்றன. மது உடல் நலத்தைக் கெடுக்கும். உயிரைப் பறிக்கும். குடும்பத்தை வீணாக்கும் . குடும்பப் பொருளாதாரதைப் பாழாக்கும். மது நாட்டுக்கு கேடு, வீட்டுக்கு கேடு, உயிருக்கு கேடு. மருத்துவர் அன்புமணி…
பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு
பாமகவின் நிழல் நிதிநிலை அறிக்கையை அக்கட்சியின் நிறுவனர் மரு.இராமதாசு 10.02.14 திங்கள்கிழமையன்று வெளியிட்டார். தமிழகச் சட்டப்பேரவையில் நிதி நிலை அறிக்கை அளிக்கப்படுவதற்கு முன்பு பாமக சார்பில் நிழல் நிதிநிலை அறிக்கை ஒவ்வோர் ஆண்டும் வெளியிடுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்கான நிழல் நிதிநிலை அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளன. கல்வி அனைத்துக் குழந்தைகளுக்கும் கட்டாயக் கல்வி, கட்டணமில்லாக் கல்வி, தரமான கல்வி,மகிழ்வான சுமையற்ற கல்வி, விளையாட்டுடன் கூடிய கல்வி வழங்கப்படும். * தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் பிற கல்விஇயக்கங்களின் பாடத்…