(உ.வே.சா.வின் என் சரித்திரம் 62 : நான் கொடுத்த வரம் 1 -தொடர்ச்சி) 38. நான் கொடுத்த வரம்…. தொடர்ச்சி “ஒவ்வொன்றிலும் கொஞ்சங் கொஞ்சம் சாப்பிடுங்கள்” என்று காரியத்தர் சொன்னார். “என்ன என்ன பிரசாதங்கள் வந்திருக்கின்றன?” என்று கேட்டேன். “சருக்கரைப் பொங்கல் இருக்கிறது; புளியோரை இருக்கிறது; சம்பா வெண்பொங்கல், எள்ளோரை, உளுத்தஞ் சாதம் எல்லாம் இருக்கின்றன. பாயசம் இருக்கிறது; பிட்டு இருக்கிறது; தேங்குழல், அதிரசம், வடை, சுகியன் முதலிய உருப்படிகளும் இருக்கின்றன” என்று அவர் அடுக்கிக்கொண்டே போனார். இயல்பாகவே பிரசாதங்களில் எனக்கு விருப்பம் அதிகம்;…