பிரணாப்பிற்கு எதிர்ப்புத் தெரிவித்தோர் மீதான கொடுந்தாக்குதலை எதிர்த்துக் கண்டன ஆர்ப்பாட்டம்!
2009-2009இல், தமிழீழத்தில் இனப்படுகொலைப் போர் நடந்து கொண்டிருந்த போது, இந்திய அரசின் வெளியுறவுத்துறை அமைச்சராகப் பணியாற்றி, அப்போரை சிங்களத்துடன் இணைந்து வழி நடத்தியப் போர்க்குற்றவாளி பிரணாப்பு. இன்று இந்தியக் குடியரசுத் தலைவராக உள்ள அவர், திசம்பர் 20 அன்று, சென்னை இலயோலாக் கல்லூரியில் நடைபெறும் ஒரு விழாவிற்கு வந்தார். அப்பொழுது அவருக்குக் கருப்புக் கொடி காட்ட முயன்றதாகத், தமிழின உணர்வாளர்கள் மீதும், மாணாக்கர்கள் மீதும் தமிழகக் காவல்துறை கொடுந்தாக்குதலை நடத்தியது. திசம்பர் 19 ஆம் நாள், தமிழ்த் திரைப்பட இயக்குநரும், இன உணர்வாளருமான திரு….