சித்திரை 20, 2046 / மே 3, 2045 பனை ஓலையில் நுழைவுச் சீட்டு! நண்பர்களே, பிரண்டைத் திருவிழாவிற்கான நுழைவுச் சீட்டுகளைப் பனை ஓலையில் அச்சிட்டுள்ளோம். பனை மட்டைகளை வெட்டிப், பதப்படுத்தி, வடிவாக நறுக்கி இதை உருவாக்கியுள்ளோம். பிரண்டைத் திருவிழா என்பதே மரபு வாழ்வியலை மீட்டெடுக்கும் பணிகளுக்கானதுதான். அதன் நுழைவுச் சீட்டு, தொன்மையான நமது பனை ஓலைத் தொழில்நுட்பத்தை மறுகட்டமைப்பு செய்துள்ளது. இப்பணியில் ஈடுபடும் இராச நவநீதகிருட்டிணன் , அவர் குடும்பத்தினர், நண்பர்களுக்கு நம் வாழ்த்துகள். பிரண்டைத் திருவிழா முத்திரை (logo) உருவாக்கியவர்: அருண் குமார் பெ…