பிரதிலிபியின் கதைப்போட்டி ‘ஒரே ஓர் ஊரில்’ – 2016/17

  வாசகர்களுக்கு வணக்கம், பிரதிலிபியின் மாபெரும் கதைப்போட்டி ‘ஒரே ஒரு ஊர்ல’ – 2016/17  இது பிரதிலிபியின் இந்த வருடத்துக்கான கதைப்போட்டி. இனி வருடாவருடம் திசம்பர் – சனவரியில் கதைகளுக்கான இந்தச் சங்கமம் நடந்துகொண்டே இருக்கும். பெரிய படிகளின் தொடக்கமாக இதனைக் கருதுகிறோம். வழக்கம்போல் உங்கள் ஆதரவினை தருமாறு கேட்டுக்கொள்கிறோம்.  கதைகள் நம் வாழ்வியலோடு பின்னிப்பிணைந்தவை. பெற்றோர்களிடம், தாத்தா பாட்டிகளிடம், நண்பர்களிடம், காதலியிடம், குழந்தைகளிடம் என நாம் அனைவரிடமும் எப்போதும் ஏதோ ஒரு கதையைப் பேசிக்கொண்டேதான் இருக்கிறோம். கதைகளின் மாயச் சுழலில் தப்பித்தவை என…

பிரதிலிபி – அகம் : கருத்தரங்கு – பரிசளிப்பு

   பிரதிலிபி – அகம் இணைந்து நடத்தும் “தமிழ் மொழியில் தொழில்நுட்பம்” குறித்தான கருத்தரங்கு ‘ஞயம்பட வரை’ போட்டியின் பரிசளிப்பு விழா பங்குனி 27, 2047 /  ஏப்பிரல் 9, 2016, மாலை 5.30 முதல் 8 மணி வரை  புத்தகம் கண்டுபிடிப்பு அரண்மனை  (டிசுகவரி புக் பேலசு)  , சென்னை  

பிரதிலிபியின் மகளிர் நாள் போட்டி – ‘யாதுமாகி நின்றாள்’

   வணக்கம். ‘யாதுமாகி நின்றாள்’ – மகளிர் நாளை முன்னிட்டுப் பிரதிலிபி நடத்தும் அடுத்த போட்டி.  காலமாற்றத்திற்கு ஏற்பப் பெண்களின் வாழ்வில் ஏற்பட்டுள்ள மாறுதல்கள் குறித்துப் பெண்களின்/ஆண்களின் பார்வைகள், பெண்ணியம் சார்ந்த கருத்துகள்/மாற்றுக்கருத்துகள், பெண்களின் உடை, உடல், மனம் சார்ந்த அரசியல், அது குறித்த பார்வைகள் எனப் பெண்கள் சார்ந்து எதைக்குறித்தும் எழுதலாம். வாசகர்கள் பரிந்துரைத்த சில தலைப்புகளும் கீழே கொடுப்பட்டிருக்கின்றன. அதை ஒட்டியும் எழுதலாம். தலைப்புகள் பின்வருமாறு : 1) நேற்றைய பெண்கள் பெரும்பாலோரிடம் அதிகம் புகார் இருப்பதாகத் தெரியவில்லை. இன்றைய பெண்கள்?…

ஞயம்பட வரை – கட்டுரைப் போட்டி: மொத்தப்பரிசு உரூபாய் 30,000/

தமிழ்மொழி முதன்மை குறித்த ஞயம்பட வரை – கட்டுரைப் போட்டி அ) தலைப்பு : “இன்றைய தமிழர்களின் வாழ்வில் தாய்மொழிக்குக் கொடுக்கப்படும் முக்கியத்துவம் என்ன? அதனை அதிகரிக்க என்னென்ன வழிமுறைகளைக் கையாளலாம்?” –  விடை காண முயல்வோம். ஆ) கட்டுரைகள் 1500  சொற்களுக்கு மேலும், 2500 சொற்களுக்கு மிகாமலும் இருக்க வேண்டும். இ) உங்கள் கட்டுரைகளை  ஒருங்குகுறி(Unicode) வடிவில்,  சொல்ஆவணமாக(MS- Word Document) ஆக மின்னஞ்சல் மூலம் அனுப்பி வைக்கவும். கருத்துகள் வரவேற்கப்படுகின்றன. ஈ) பரிசுத்தொகை : முதல் பரிசு – 15000 இரண்டாம்…