பிரபஞ்சன் காலமானார்
எழுத்தாளரும் திறனாய்வாளரும் விருதாளருமான பிரபஞ்சன் இன்று(மார்கழி 08, 2049 / திசம்பர் 21, 2018) காலமானார். எழுத்தாளர் பிரபஞ்சன் சித்திரை 15, 1976 / ஏப்பிரல் 27, 1945 ஆம் நாளன்று புதுச்சேரியில் பிறந்தார். இவரது இயற்பெயர் சாரங்கபாணி வைத்தியலிங்கம். கரந்தைக் கல்லூரியில் தமிழ் வித்துவான் பெற்றவர் இவர். தஞ்சாவூரில் ஆசிரியராகத் தனது பணி வாழ்க்கையைத் தொடங்கியவர், அதன் பின்னர் இதழுலகில் நுழைந்தார். குமுதம், ஆனந்த விகடன், குங்குமம் ஆகிய வார இதழ்களில் பணிபுரிந்தார். இவரது ‘என்ன உலகமடா’ என்னும் முதல் சிறுகதை…
இதழாளர் மகாதேவா நினைவுச் சிறுகதைப்போட்டி – பரிசளிப்பு விழா
ஆவணி 25, 2048 / ஞாயிறு / 10.09.2017 மாலை 5.30 இதழாளர் மகாதேவா ஐயா நினைவுப் பன்னாட்டுச் சிறுகதைப்போட்டி : பரிசளிப்பு விழா, திருச்சிராப்பள்ளி
எழுத்தாளர்களைக் குமுகம்(சமூகம்) ஏற்க வேண்டும்!
எழுத்தாளர்களைக் குமுகம்(சமூகம்) ஏற்க வேண்டும்! இனிய நந்தவனம் பதிப்பக வெளியீடாக எசு.செல்வசுந்தரியின் ‘கை நழுவும் சொருக்கம்‘ (சிறுகதை நூல்) ‘உன்னை விட்டு விலகுவதில்லை‘ (புதினம்) ஆகிய இரண்டு நூல்களின் வெளியீட்டு விழா திருச்சி மாவட்ட ஆட்சியர் முனைவர் கே.எசு.பழனிச்சாமி தலைமையில் எழுத்தாளர் மதுரா முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது விழாவில் மாவட்ட வருவாய் அலுவலர் தர்பகராசு, வரலொட்டி ரெங்காசாமி, குமாரசாமி, பாசுகரன் ஆகியோர் வாழ்த்துரை வழங்க, எழுத்தாளர் இராச்சா, திருநங்கை பிரியாபாபு ஆகியோர் நூல் ஆய்வு செய்தனர் சிறப்பு விருந்தினராக எழுத்தாளர் பிரபஞ்சன்…