அவன் வருகின்றான்!…. – கசமுகன் பிள்ளயாந்தம்பி
தமிழர்களை அழிப்பேன் தமிழையும் அழிப்பேன் தணிக்கைகள் பல செய்வேன் தமிழ் இனத்தை தவி தவிக்கச் செய்து தரணியில் இல்லையெனச் செய்வேன்!….என்று தனி மனித உரிமைகளைத் தட்டிக் கழித்தான் தனி நாடு கேட்டோம் தத்துவங்கள் பல பேசி, தந்திரங்கள் என நினைத்து, தரித்திரத்தைத் தேடிக் கொண்டான்!…. தமக்கென இருக்கிறான் ஒருவன் தக்க சமயத்தில் வருவான் தயக்கமென்ன தமிழா! தலை நிமிர்ந்து நில்லு தமிழ் இனத்தின் தனித்துவத்தைச் சொல்லு உலகிற்கு!…. http://www.lankasripoems.com/?conp=poem&catagoryId=200000&pidp=211614
காங். ஆட்சியில் இந்தியா ஏழை நாடாகி விட்டது: சரத்குமார்
நெல்லை நாடாளுமன்றத் தொகுதி அதிமுக வேட்பாளர் பிரபாகரனை ஆதரித்து, சமக தலைவர் நடிகர் சரத்குமார் களக்காடு, மாவடி, டோனாவூர் பகுதியில் திறந்த ஊர்தியில் பரப்புரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது:– ‘‘மத்தியில் காங்கிரசு ஆட்சியில் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதனால் நாட்டின் முன்னேற்றம் பாதிப்பு அடைந்துள்ளது. பொதுமக்களின் வாழ்க்கைத் தரமும் வீழ்ச்சி அடைந்துள்ளது. கடந்த 1999 ஆம் ஆண்டு முதல் 14 ஆண்டுகளாக, காங்கிரசுடன் திமுக கூட்டணியில் இருந்து பதவி நலத்தைத் துய்த்துள்ளனர். தமிழகத்தில் விலைவாசி உயர்ந்து விட்டது என்கிறார் தாலின். இந்தியாவில் எரிவளி விலை, …
மாவீரர்நாள் உரைமணிகள் சில! – 6
(முன்னிதழ்த் தொடர்ச்சி) . . .வாழ்வுமின்றி, நாம் அரசியல் வெறுமைக்குள் தொடர்ந்தும் சிறைபட்டுக் கிடக்கமுடியாது. சிங்களத் தேசமானது தமிழினத்தை அரவணைத்து, இணைத்து வாழவும் விரும்பவில்லை. அதே சமயம், பிரிந்து சென்று தனித்து வாழவும் விடுவதாக இல்லை. இரண்டுங் கெட்டான் நிலையில் விடிவின்றி, விடுதலையின்றி, எதிர்கால நல்வாழ்வின்றிச் சூனியமான அரசியல் இருட்டுக்குள் நாம் தொடர்ந்து வாழமுடியாது. பொறுமைக்கும் எதிர்பார்ப்புக்கும் எல்லைக்கோடுகளுள்ளன. அந்த எல்லைக் கோடுகளை நாம் அடைந்துவிட்டோம். . . . -மாவீரர் நாள் உரை – 2004 நிலையற்ற வாழ்வையும்,உறுதியற்ற எதிர்காலத்தையும் இனியும் எமது…
மாவீரர் உரைகளின் மணிகள் சில!
(முந்தைய இதழின் தொடர்ச்சி) எமது மண் நாம் பிறந்து வளர்ந்து வாழ்ந்த மண். எமது மூதாதையோரின் பாதச்சுவடுகள் பதிந்த மண். எமது பண்பாடும் வரலாறும் வேர்பதிந்து நிற்கும் மண் எமக்கே சொந்தமாக வேண்டும் என்ற குறிக்கோளுக்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள். அயலக ஆதிக்க விலங்குளால் கட்டுண்டுக் கிடக்கும் எமது தாயக மண்ணை மீட்டெடுத்து தன்னாட்சி உரிமை பெற்ற விடுதலைத் தேசமாக உருவாக்கும் இலட்சியத்திற்காக எமது மாவீரர்கள் மடிந்தார்கள்.