தமிழ்ச்சோலை மெய்வல்லுநர் போட்டி 2014
பிரான்சு – வில்நியூவு தூயசியார்சு தமிழ்ச்சங்கத்தின் தமிழ்ச்சோலை மாணவர்களிடையேயான இல்ல மெய்வல்லுநர் போட்டி 2014 ஆனி 8, 2045 / 22.06.2014 ஞாயிற்றுக்கிழமை வில்நியூவு தூயசியார்சு நகரத் திடலில் தமிழ்ச்சங்க உறுப்பினர், பொதுச்சுடரினை, காலை 10.00 மணிக்கு ஏற்றி வைத்தார்; சங்கத் தலைவர் பிரெஞ்சு தேசியக்கொடியினை ஏற்றி வைத்தார்; தமிழீழத் தேசியக்கொடியினை மக்கள் பேரவைச் செயலாளரும் தமிழ்ச்சங்கத்தின் உறுப்பினரும் ஏற்றி வைக்க அகவணக்கம் செலுத்தப்பட்டது; தமிழ்ச்சோலை விளையாட்டுத்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார்; எல்லாளன் சங்கிலியன் இல்லங்களின் வீரர்கள் அணிவகுப்பு செய்தனர்…