கடவுளர் சிலைகளுக்குப் பூணூல் எதற்கு? – இலக்குவனார் திருவள்ளுவன்
கடவுளர் சிலைகளுக்குப் பூணூல் எதற்கு? சாதி என்பது பழந்தமிழரிடம் இல்லாத ஒன்று. இன்றோ, ஆரியரால் புகுத்தப்பட்ட சாதி, மக்களிடையே பாகுபாட்டை உருவாக்கி, உயிர் பறிக்கும் அளவிற்கு வேரூன்றிய பெருங்கேடாய் மாறிவிட்டது. சாதிகள் சிலவற்றின் அடையாளமாக இருப்பது பூணூல். வீரம் மிகு தமிழர்கள் அம்புறாத்தூணியை அணிந்திருந்தனர். தோளில் அணியும் அம்புகள் நிறைந்த கூடுதான் இது. இது மூவகைப்படும். இதனைப் பார்த்த ஆரியர்கள் இதுபோல் முப்புரி நூலை அணிந்தனர். பிராமணர்களின் அடையாளமாக விளங்குவது பூணூலே. ஆனால், பொற்கொல்லர், தச்சர் முதலான கை வினைஞர்கள் தாங்கள்தான் பிறக்கும்…
தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் : [ஙு] போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி : இலக்குவனார் திருவள்ளுவன்
(தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙீ] 2. போர்முகம் நோக்கிய இளமைப்பாதை-தொடர்ச்சி) தமிழ்ப்போராளி பேராசிரியர் சி.இலக்குவனார் [ஙு] போர்முகம் நோக்கிய இளமைப்பாதை – தொடர்ச்சி பெரும்புலவர் ந.மு.வேங்கடசாமி(நாட்டாரின்) இளவல் ந.மு.கோவிந்தராய(நாட்டா)ர் அவர்கள் அடுத்த தலைமையாசிரியராய் மாறுதலில் வந்தார். இவர் அனைவரையும் சிவநெறிக்கண் திருப்பி ஒழுங்கையும் பண்பாட்டையும் நிலைநாட்டினார். தமிழாசிரியர் நாராயணசாமி(பிள்ளை) ஓய்வு பெற்ற பின் மாறி வந்த தமிழாசிரியர் சாமி. சிதம்பரனார் பேராசிரியர் வாழ்வில் திருப்புமுனையை ஏற்படுத்தினார். அனைவரிடமும் தூய தமிழ்ப்பற்றை வளர்த்த தன்மதிப்புஇயக்கப் பற்றாளரான அறிஞர் சாமி சிதம்பரனார் பேராசிரியர்பால் பேரன்பு கொண்டவர்; …
பிராமணர்களின் தமிழ் வெறுப்பு தமிழ் நூல்கள் அழிவுக்கும் காரணமாயிருந்தது.
பிராமணர்களின் தமிழ் வெறுப்பு தமிழ்மொழி குன்றுதற்கும் தமிழ் நூல்கள் பலவற்றின் அழிவுக்கும் காரணமாயிருந்தது. கி.பி. 10 ஆம் நூற்றாண்டில் பிராமணராலும், 14ஆம் நூற்றாண்டில் மகமதியரா லும் அநேக நூல்கள் அழிக்கப்பட்டன பிராமணர் தாம் அழிக்க முடியாத நூல்களைச் சிதைவுபடுத்தினர். தமிழ் நூல்களை எடுத்து சமக்கிருதத்தில் மொழி பெயர்த்துப் பல கேடு செய்திருக்கின்றனர். ந.சி. கந்தையா (பிள்ளை): தமிழர் சரித்திரம்: பக்கம் 221-222
ஆரியப் பார்ப்பனர் சூழ்ச்சிகளை உரைப்பின் மிக விரியும் – மறைமலை அடிகள்
இவ்வாரியப் பார்ப்பனர் தமிழையும் தமிழ் நூல்களையும், தமிழரையும், தமிழ்ப் பெரியாரையும், தமிழ்த் தெய்வத்தையும் தாழ்வுபடுத்தி விடும் சூழ்ச்சிகளை எல்லாம் ஈண்டுரைக்கப் புகின் இது மிக விரியும். பொதுவாகத் தமிழ்த் தொடர்புடைய எதனையும் இகழ்ந்தொதுக்குதலே இவர்தம் கடப்பாடு. தாம் அங்ஙனம் ஒதுக்குதற்கு ஏலாமல் ஏற்பதற்குரியது மிகச் சிறந்தது ஏதேனும் ஒன்றைத் தமிழிற் கண்டால் உடனே அஃது ஆரியராகிய தம்மவரிடமிருந்து வந்ததென நாட்டுதற்குத் தக்க ஏற்பாடுகளை எல்லாம் எப்படியோ செய்து வைப்பர். – மறைமலை அடிகள்: வேளாளர் நாகரிகம்:பக்கம் – 21
தமிழின் சிறப்பை மறக்கச் செய்தனர் – மொ.அ.துரை அரங்கசாமி
… எனினும், அவர்தம் செல்வாக்கின் பயனாய் ஆரிய மொழியிலிருந்தே தமிழ் மொழி பிறந்ததென்றும், தமிழ்மொழியிலுள்ள பல சொற்கள் ஆரிய மொழியின் சொற்களிலுள்ள முதனிலைகளைக் கொண்டே பிறந்தனவென்றும், தமிழர் ஆரியரிடமிருந்தே நாகரிகம் கடவுட் கொள்கைகள் பிற எல்லாம் கடன் வாங்கிக் கொண்டனர் என்றும் பிறவாறும் கூறித் தமிழைத் தனித்தியங்க வல்ல மொழி என்பதைத் தமிழ்மொழி வல்லாரும் மறந்து விடும்படிச் செய்து விட்டனர். அறிஞர் மொ.அ.துரை அரங்கசாமி: பண்டைத் தமிழ்நெறி : பக்கம்-3