பிரித்தானியா தமிழர் பேரவையின் தேர்தல் – 2018 – 2019
பிரித்தானியா தமிழர் பேரவையின் உள்ளூர் கட்டமைப்புகளுக்கான தேர்தல் – 2018 – 2019. பிரித்தானியா தமிழர் பேரவையின் 2018 – 2019க்குரிய உள்ளூர் கட்டமைப்புகளுக்கான தேர்தல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.தமிழ் மக்களுக்கான நீதிக்கும் நிலையான தீர்வுக்குமான அடிப்படைவழியை வகுத்து 2006இல் இருந்து பிரித்தானியா தமிழர் பேரவையினர் தமதுஅரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதன் முதன்மைப்பகுதியாகப் பல உள்ளூர் கட்டமைப்புக்களை உருவாக்கி அப்பகுதிகளில் வாழும் தமிழ் மக்களையும் உள்வாங்கி மக்கள்நாயக முறையில் தமிழர்களின் அரசியல் போராட்டத்தினைப் புலம்பெயர்தேசத்தில் முன்னெடுத்து வருகின்றனர். கடந்த காலங்களில் இலங்கை அரசின் தமிழர்களுக்கெதிரான…