புலவரேறு பெ.அ.இளஞ்செழியன் [வைகாசி 28, 1969 / 10.06.1938 – ஐப்பசி 14,2052 / 31.10.2021] பிரிந்து மறைந்தது முறையா ஐயா?   அன்பே உருவாய் ஆட்கொண் டீரே பண்பின் வடிவாய்  எமைக் கவர்ந்தீரே நட்பின் இலக்கணம் கற்பித்தீரே பிரிய இயலாப் பரிவின் உருவே பிரிந்து சென்றிட எப்படி ஒப்பினீர்? காலம் முழுமையும் கட்சிக்கு  உழைத்தீர்! காலணாப் பயனும்  கருதா மனத்தீர்! திராவிட இயக்கப் பாவலர் அணியில் முன்னணி  வரிசை  முதல்வர் நீவிர்! அண்ணா கலைஞர் பேராசிரியர் எந்நாளும் நீர் போற்றிடும் நாவலர் அனைவரும் …