மொரிசீயசில் கவினியனின் குறுந்தொகை பிரெஞ்சு மொழிபெயர்ப்பு வெளியீடு
தமிழ் இலக்கிய வரலாற்றின் தவிர்க்க இயலாப் பெயர் வைதேகி எர்பர்ட்டு. தூத்துக்குடி தந்த நன்முத்தான திருவாட்டி வைதேகி எர்பர்ட்டு, சங்க இலக்கியங்களையும் பதினெண்கீழ்க்கணக்கு நூல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர். நூலாக்கத்துடன் சங்க இலக்கியப் பரப்புரைக் களமும் நடத்தும் வைதேகி அம்மையார், எந்தப் பொதுநிறுவனத்திடமிருந்தும் உதவித்தொகை பெறாமல், தன்னுடைய சொந்தச்செலவில் மொழிபெயர்ப்பு நூல்களை வெளியிட்டு வருகிறார். இதைப்பின்பற்றி, கவினியன், தமிழுலகு நன்மை எய்த குறுந்தொகை பிரெஞ்சு மொழிபெயர்ப்பைக் கொணர்கிறார் என்பது மகிழ்ச்சிக்குரியது. இவ்வாறான 93 குறுந்தொகை பிரெஞ்சு மொழிபெயர்ப்பை, மொரிசீயசு தமிழன்பர் கவினியன், நூலாக…