நீ வரும் திசையை நோக்கி நெடுந் தவம் செய்வோம் – உலோக நாதன்

  இனியும் இனியும் நீதான்! வல்வையின் வடிவே! தமிழர் வாசலின் நிமிர்வே ஐயா! சொல்லிய திசையில் சுடரும் சூரிய தேவே! தழுவும் மெல்லிய காற்றே! பாசம் மேலிடும் ஊற்றே! உன்னை அள்ளியே அணைக்க ஆசை ஆவலோடு உள்ளோம் வாராய்! அற்றைத்திங்கள் நீதான்! அவ்வெண் நிலவும் நீதான், ஓற்றைக்காற்றும் நீதான், ஓண்டமிழ்க் குரலும் நீதான், கோற்றவைப் பிள்ளை நீதான், கொடியர சாள்வாய் நீதான், இற்றைவரைக்கும் நீதான், இனியும் இனியும் நீதான்! நேற்று நீ இருந்தாய் அழகாய் நிலவிலும் நீயே வடிவாய் ஏற்றுமே துதித்தோம்! உன்னில் எத்தனைக்…

அழிவில்லா எம் தலைவனின் அகவை இன்று அறுபத்தொன்று – பா சங்கிலியன்

    ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் அழிவில்லா எம் தலைவனின் அகவை இன்று அறுபத்தொன்று அடிமைப்பட்ட தமிழனை அடங்கா தமிழனாக்கிய அண்ணலே நீர் நீடூழி வாழ்க! செந்தமிழர் புகழை பாரெங்கும் பரப்பிய வள்ளலே நீர் நீடூழி வாழ்க! சொல் வீரம் காட்டாத சொக்கத்தங்கமே செயல் தான் வீரமென செய்து காட்டிய செம்மலே நீர் பல்லாண்டு வாழ்க! – ‘சங்கிலியன் பாண்டியன்‎