சாதி நிலைத்திருக்கும் வரை மக்களாட்சி வெற்றிபெறுதல் இயலாது! – சி.இலக்குவனார்
பிறப்பு (சாதி) வேறுபாடுகள் நிலைத்திருக்கும் வரை மக்களாட்சி வெற்றிபெறுதல் இயலாது! சாதிகளைப் போற்றும் சங்கங்கள் இருத்தல் கூடாது; அவற்றைத் தடுத்தல் வேண்டும் என்று கூறுகின்றனர். இந்நாட்டின் ஒற்றுமையைக் குலைத்து மக்களாட்சி வெற்றி பெறாமல் செய்துவரும் தீமைகளுள் தலையாயது சாதிமுறையேயாகும். சாதிகள் ஒழிந்தாலன்றிச் சமநிலை மன்பதைஉருவாதல் ஒருநாளும் இயலாது. ‘பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்‘ என இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்னர் திருவள்ளுவர் முழங்கியும் இன்னும் பிறப்பால் வேறுபாடுகாட்டும் நிலை அழியாமல் இருப்பது மிக மிக வருந்தத்தக்கது. பிறப்பு (சாதி) வேறுபாடுகள் நிலைத்திருக்கும் வரை மக்களாட்சி வெற்றிபெறுதல்…