காதல் ஒரு விந்தை!

– கவிக்கோ ஞானச்செல்வன் திங்களை வென்ற ஒளிமுகத்தாள்-நறும் தேன்சுவை தோற்கும் மொழியுடையாள் கொங்கலர் மேவும் கூந்தலினாள்-எழில் கொட்டும் திருவென உருவுடையாள்! கங்கு கரையறு அன்பையெல்லாம்-விழி காட்டும் எனத்தகும் கண்ணுடையாள்! பொங்கி வரும்பெரு நிலவிடையே-உயிர் போன்றதன் காதலன் தனைக்காண்பாள்! ஆயிரம் கனவுகள் கண்டதுண்டு-புவி ஆளும் அடலுறு தலைவனுண்டு ஆயிழை குரிசில் கரம்கோத்து-தினம் ஆடிப் பாடிக் களித்ததுண்டு பாய்மரக் கப்பல் இல்லறமாம்-மிகப் பரந்த பெருங்கடல் வாழ்கையதாம் சேயிழை தென்னஞ் சோலையென-வளம் செழிக்கும் நல்லறம் எண்ணிடுவாள்! பாதச் சிலம்புகள் அமைதிபெற-இளம் பாவை ஓரிடம் தனிலமர்ந்து காதலன் வரவை மனத்தெண்ணி…

மத்திய அரசும் தமிழகக் கட்சிகளும் – இலக்குவனார் திருவள்ளுவன்

இந்தித்திணிப்பில் உறுதி கொண்ட மத்திய அரசும் ஆரவார முழக்கங்களால் தடுமாறும் தமிழகக் கட்சிகளும்     மத்திய அரசிற்கு மக்கள் நலம் சார்ந்த கொள்கைகளில் உறுதிப்பாடு இல்லை. ஆனால், இந்தித்திணிப்பில் விடாப்பிடியான உறுதிப்பாடு உள்ளது. மத்தியில் எந்தக் கட்சி ஆட்சி செய்தாலும் மத்திய அரசின் இந்தித் திணிப்பு என்பது திட்டமிட்டுச் சீராக நடைபெற்றுக் கொண்டு பிற தேசிய மொழிகளை அழித்து வருகின்றது. இத்தகைய பிற மொழித் தேசிய இன அழிப்பு வேலையின் அரங்கேற்றக் காட்சிதான் அண்மையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்றது.   உலகின்…

வாழ்ந்து தழை – அரியரவேலன்

வாழ்ந்து தழை – அரியரவேலன் புள்ளல்லவே? – நீ புழுவல்லவே? – பின் புல்லரைக் கண்டேன் அஞ்சுகிறாய்? கல்லல்லவே? – நீ கசடல்லவே? – பின் கயவரைக் கண்டேன் இஞ்சுகிறாய்? மண்ணல்லவே? – நீ மரமல்லவே? – பின் மடயரை ஏன்நீ கெஞ்சுகிறாய்? விழலல்லவே? – நீ வெற்றல்லவே? – பின் வீணரைக் கண்டேன் துஞ்சுகிறாய்? கண்ணைத் திற! – கீழ் விண்ணை அறி! – இரு கைகளை ஏனினும் கட்டுகிறாய்? கூட்டை உடை! – சங்கை ஊதி எழு! – சேவல் கூவிய…

அம்மா பசிக்கிறது..! கொஞ்சம் சோறு போடுங்கள்!- சுப காண்டீபன்

அம்மா பசிக்கிறது..! கொஞ்சம் சோறு போடுங்கள்! சுப காண்டீபன் பசிக்கிறதம்மா…  பசிக்கிறது!  இரு கரம் கூப்பி கேட்கின்றேன். என் வயிற்றினுள் ஏதோ சத்தங்கள் பல கேட்கின்றன. எனக்கு அச்சத்தம் என்னவென்றும் தெரியவில்லை. ஒன்றும் புரியவும் இல்லை. ஈர் இரண்டு நாட்களாக எந்த உணவும் உண்ணவில்லை. இரண்டு நாட்களாக மலம் கூடக்கழிக்கவில்லை. ஒட்டிய வயிற்றுடன் அலைந்து திரிகின்றேன். ஒரு பிடி உணவேனும் தருவீர்களென எண்ணி! எனைப்பெற்றவர்கள் உயிரோடு இருந்திருந்தால் நான் வருவேனா உங்களின் வாசல் தேடி? முலைப்பால் கூட முழுதாகப்பருகவில்லை. எனை வயிற்றினில் சுமந்தவளும் வயிராற…

குடிசைத் தொழிலாகிப் போன தமிழ் எழுத்துச் சீர்திருத்தம்! – பகுதி-3 : நாக.இளங்கோவன்

  (ஐப்பசி 9, 2045 / 26 அக். 2014 தொடர்ச்சி) முந்தைய கட்டுரையின் இறுதியில் சொல்லப்பட்ட வடிவமாற்ற முன்வைப்பொன்றில், ஆய்தக்குறிக்கு மாற்றாக யாருக்கேனும் விருப்பமும் கணிப்பற்றும் இருந்தால் கணியில் இருக்கும் அடைப்புக் குறியையோ விடுகுறி(caret)யையோ அலைக்குறி(tilde)யையோ போடலாம் என்று உகர ஊகாரத் துணைக்குறியீடாக அடைப்புக் குறியை அந்தக் கட்டுரையாளர் போட்டுவிட்டிருந்தது அவரின் சீர்திருத்த முன்வைப்பின் உச்சம் எனலாம். பன்னூறு ஆண்டுகளாக நிகழ்வில் இருக்கும் எழுத்துகளிற்குப் பல்வேறு  வேடங் கட்டிபிரித்து, நெளித்து, வெட்டி எழுதிய எழுத்து வடிவங்களைப் பார்த்தோமல்லவா? இதோ இன்னொரு போட்டியாளர் தனது எழுத்துவடிவ…

சிவகங்கை இராமச்சந்திரனாரின் சீர்மிகு பணிகள் – இலக்குவனார் திருவள்ளுவன்

  தமிழே நம் மொழியும் இனமுமாகும். ‘திராவிடம்’ என்பது மொழியுமல்ல; இனமுமல்ல. ஆனால், ‘தமிழ்’ என்னும் சொல் ‘திராவிடம்’ என்று மாறியுள்ளது. ‘திராவிடம்’ என்பது மொழியைக் குறிப்பிடுகையில் தமிழ்க்குடும்ப மொழிகளைக் குறிப்பிடுகிறது; இனத்தைக் குறிப்பிடுகையில் தமிழ்க்குடும்ப இனங்களைக் குறிப்பிடுகிறது. அதே நேரம் இயக்கத்தைக் குறிப்பிடுகையில், ஆரிய மூட நம்பிக்கைகளை அகற்றும், தமிழின் அருமை பெருமைகளை உணரச் செய்யும், தன் மதிப்பில் வாழ அறிவுறுத்தும், பகுத்தறிவை நாடச் சொல்லும் குறியீடாகத் திராவிடம் வழங்குகிறது. எனவே, ‘திராவிடம்’ என்று குறிக்கும் பொழுது தமிழரல்லாத பிற தமிழ்க்குடும்ப இனத்தவரை…

இந்த வார வல்லமையாளர் – திரு. பாலமுருகன்

 வல்லமை வளர்தமிழ் மையம் சார்பிலான வல்லமை மின்னிதழ் சித்திரை 2043 / ஏப்பிரல் 2012 இலிருந்து கிழமைதோறும்-அக்கிழமையில் சிறந்த ஆற்றலாளரைத் தேர்ந்தெடுத்து – வல்லமையாளர் விருது வழங்கி வருகின்றது. ஏதேனும் ஒரு புள்ளியில் தம் ஆற்றலைச் சிறந்த முறையில் வெளிப்படுத்தும் யாராயினும் அடையாளங் காணப்பட்டு வல்லமையாளர் விருதால் சிறப்பிக்கப்படுகின்றனர். அந்த வகையில், இந்த வார (ஆவணி 23, 2045 / செப்.8,2014) வல்லமையாளர் விருது அகரமுதல படைப்பாளர்களில் ஒருவரும் திருவண்ணாமலைத் துணை வட்டாட்சியருமான திரு ச.பாலமுருகனுக்கு வழங்கப்பெற்றுள்ளது. விருதாளர் பாலமுருகனுக்கு வாழ்த்துகளையும் விருது வழங்கும்…

தமிழ் நிலத்தில் தேன்மழை பொழிந்த சுரதா! – இலக்குவனார் திருவள்ளுவன்

  தாய்மண்ணை வணங்குவதாக அனைவரும் கூறுவோம். ஆனால், உண்மையில் தாய்மண்ணைப் போற்றி வணங்கியவர் உண்டென்றால் அவர் உவமைக் கவிஞர் சுரதா ஒருவர்தான். தான் பிறந்த மண்ணையும் தமிழறிஞர்கள் பிறந்த ஊர் நிலத்தின் மண்ணையும் சேமித்து வணங்கியவர். தமிழறிஞர்கள் பிறந்த  ஊர் தோறும் சென்று அங்குள்ள மண்ணை எடுத்து மண் கலயத்தில் சேர்த்து வந்தார். ‘’அவற்றைத் திரட்டி என்ன செய்யப் போகிறேன். என்பது ஒரு கனவு’’ எனக் கூறி வந்தவர், அதனை நிறைவேற்றாமலே மறைந்து விட்டார்.   சிறுகதை எழுத்தாளர் செகசிற்பியன் உவமைக்கவிஞர் பட்டத்தை இவருக்கு…